Level -2 ADAS அம்சங்களுடன் வரும் Tata Harrier, Tata Safari கார்கள்
டாடா மோட்டார்ஸ் தனது இரண்டு எஸ்யூவிகளான Tata Harrier மற்றும் Tata Safari-யை Level -2 ADAS அம்சங்களுடன் புதுப்பித்துள்ளது.
ADAS என்பது மேம்பட்ட ஓட்டுநர்-உதவி அமைப்பு (Advanced driver-assistance system) ஆகும். இந்த தொழில்நுட்பம் ஓட்டுனரின் வேலையை இன்னும் எளிதாகிறது மற்றும் கூடுதலான பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.
டாடா ஹாரியர் மற்றும் சஃபாரியின் ADAS தொகுப்பு இப்போது lane-keeping assist (LKA) மற்றும் lane centering-உடன் கூடிய adaptive steering assist (ASA) போன்ற அம்சங்களைப் பெறும்.
லேன் அசிஸ்ட் காரின் லேன் பொசிஷனை கண்காணித்து, லேனில் கார் நகர்ந்து கொண்டே இருக்க உதவுகிறது.
மறுபுறம், அடாப்டிவ் ஸ்டீயரிங் அசிஸ்ட் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோலுடன் இணைந்து க்ரூஸிங் வேகத்தை பராமரிக்கவும், காரை பாதையில் வைத்திருக்கவும் செயல்படுகிறது.
இந்த இரண்டு கார்களிலும் ADAS அம்சங்களுடன், வண்ண விருப்பங்களும் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
Tata கடந்த ஆண்டு அக்டோபரில் 11 வெவ்வேறு ADAS அம்சங்களுடன் இரண்டு SUVகளின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகப்படுத்தியது.
மேலும் adaptive cruise control, autonomous emergency braking, forward collision warning மற்றும் high beam assist போன்ற அம்சங்கள் இதில் அடங்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |