இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் தயாராகவுள்ள ஜாகுவார் கார்கள்!
தமிழ்நாட்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ரூ.9,000 கோடி முதலீடு செய்யவிருப்பதால் பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.9,000 கோடி முதலீடு
கடந்த மாதம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ரூ.9,000 கோடி ஒப்பந்தம் செய்தது.
இதனால், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் முதலீடு செய்யவிருப்பதால் ஜாகுவார், லேண்ட் ரோவர் கார்கள் தமிழ்நாட்டில் தயாராகவுள்ளது.
தமிழக மாவட்டமான ராணிப்பேட்டையில் புதிதாக அமையவுள்ள டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலையில் ரேஞ்ச் ரோவர், லேண்ட் ரோவர், டிஃபெண்டர் கார்கள் தயாரிக்கப்படவுள்ளன.
தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சொகுசு கார்களை அயல்நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு 2 லட்சம் ஜாகுவார், லேண்ட் ரோவர் கார்களை தயாரிப்பதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிரிட்டன், சீனா, பிரேசில், ஸ்லோவாக்கியா போன்ற நாடுகளில் JLR கார் தொழிற்சாலைகள் அமைந்துள்ள நிலையில், இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் ஜாகுவார் கார்கள் தயாராகவுள்ளது. இந்த சொகுசு கார்களின் உற்பத்தி மையமானது ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமையவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |