வெறும் 21,000 ரூபாயில்., 400km Range தரும் புதிய Tata Punch EV முதற்பதிவு தொடக்கம்
Tata Motors தனது Tata Punch EVயை வெள்ளிக்கிழமை (ஜனவரி 5) வெளியிட்டது. மேலும், இந்த காரின் முன்பதிவு இன்று முதல் தொடங்கியது.
இந்த கார் முழுமையாக சார்ஜ் செய்தால் 300 முதல் 400 கிமீ வரை ஓடும் என்று நிறுவனம் கூறுகிறது.
வீடு வீடாக சென்று புடவை விற்றவர்., இன்று சொத்து மதிப்பு ரூ.31 லட்சம் கோடி-கவுதம் அதானி கடந்து வந்த பாதை
21,000 ரூபாய் டோக்கன் பணம் செலுத்தி முன்பதிவு செய்யலாம். Tata Punch EV ஆனது Citroen eC3 உடன் போட்டியிடும்.
இது Nexon EV மற்றும் Tiago EVக்கு இடையில் நிலைநிறுத்தப்படும். அதாவது, எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.10 லட்சம் முதல் 13 லட்சம் வரை இருக்கலாம்.
Tata Punch EV இரண்டு வகைகளில் கிடைக்கும்
Tata Punch EV கார் Standard மற்றும் Long Range என இரண்டு வகைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Standard வகை 25kWh பேட்டரி பேக்கைக் கொண்டிருக்கும் மற்றும் Long Range வகை 35kWh பேட்டரி பேக்கைக் கொண்டிருக்கும்.
Standard வகை 3.3kW AC சார்ஜருடன் மட்டுமே வருகிறது, அதே நேரத்தில் Long Range வகை 7.2kW AC சார்ஜருடன் 150kW DC ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் வருகிறது.
Tata Punch EV கார் Smart, Smart+, Adventure, Empowered மற்றும் Empowered+ ஆகிய 5 வகைகளில் கிடைக்கிறது.
அதுமட்டுமின்றி இந்த கார் Empowered Oxide dual-tone, Seadwood dual-tone, Fearless Red dual-tone, Daytona Grey dual-tone மற்றும் Pristine White dual-tone ஆகிய 5 டூயல்-டோன் வண்ண விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Ta Punch EV உட்புற அம்சங்கள்
Punch EV டாஷ்போர்டின் சிறப்பம்சமாக புதிய 10.25-inch infotainment display உள்ளது. இது 10.25inch Digital Instrument Cluster மற்றும் பாரிய two-spoke steering wheelயும் கொண்டுள்ளது.
இது தவிர, பஞ்ச் EV ஆனது 360 Degree Camera, leatherette seats, auto holdடுடன் கூடிய electronic parking brake, இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்பம், wireless charger, ventilated front seats, cruise control மற்றும் புதிய Arcade.ev app suite ஆகியவற்றைப் பெறும். Sunroof ஒரு விருப்பமாகவும் கிடைக்கிறது.
பாதுகாப்பிற்காக, அனைத்து வகைகளிலும் 6 airbags, ABS மற்றும் ESC இருக்கும். இது blind view monitor, அனைத்து இருக்கைகளுக்கும் three-point seat belts, ISOFIX mount மற்றும் SOS செயல்பாடு ஆகியவற்றைப் பெறுகிறது.
டாடாவின் போர்ட்ஃபோலியோவில் இது 4வது முழு எலக்ட்ரிக் கார்
இந்தியாவின் மிகச்சிறிய எலக்ட்ரிக் எஸ்யூவி (India's smallest electric SUV) என்பதைத் தவிர, இந்த கார் டாடாவின் போர்ட்ஃபோலியோவில் நான்காவது முழு எலக்ட்ரிக் கார் ஆகும்.
Nexon EVக்குப் பிறகு டாடாவின் இரண்டாவது electric SUV இதுவாகும். Generation 2 EV architectureல் உருவாக்கப்பட்ட டாடாவின் முதல் மாடல் இதுவாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Tata Punch EV, Tata Punch EV price, Tata Punch EV variants, Tata Punch EV specs, Tata Punch EV booking started