Maruti Suzuki Swift-ஐ விஞ்சிய Tata Punch.! ஜூன் மாதம் அதிகம் விற்பனையான டாப்-10 கார்கள் இதோ...
கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில், கார் தயாரிப்பு நிறுவனங்கள் அதிக போட்டித்தன்மையுடன் உள்ளன.
SUV கார்கள் மீது அனைவருக்கும் ஆர்வம் இருப்பதால், அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் அந்த பிரிவில் கார்களை தயாரிப்பதில் கவனம் செலுத்துகின்றன.
சமீப காலம் வரை அனைத்துப் பிரிவுகளிலும் ஆதிக்கம் செலுத்தி வந்த மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் சவாலை சந்தித்து வருகிறது.
இந்நிலையில், உள்நாட்டு ஆட்டோமொபைல் நிறுவனமான டாடா மோட்டார்ஸின் (Tata Motors) Micro SUV மாடல் காரான tata Punch, மாருதி சுஸுகி Swift-ஐ விஞ்சியுள்ளது.
Society of Indian Automobile Manufacturers-ன் தரவுகளின்படி, கடந்த மாதம் பயணிகளுக்கான கார் விற்பனையில் மூன்று சதவீதம் அதிகரித்து, மொத்தம் 3.7 லட்சம் கார்கள் விற்பனையாகியுள்ளது.
அதில் Punch, Swift, Creta, Ertiga மற்றும் Baleno ஆகியவை கார்கள் முதல் 5 இடங்களில் உள்ளன.
கடந்த மே மாதம் டாப்-10 கார்களில் அதிகம் விற்பனையான டாடா பன்ச், ஜூன் மாதத்தில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்டை கடந்தது.
டாடா பஞ்ச் பல மாதங்களாக தொடர்ந்து சிறந்த விற்பனையாகும் கார்களில் ஒன்றாக உள்ளது. டாடா பன்ச் அதன் குறைந்த விலை மற்றும் மேம்பட்ட அம்சங்களால் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. அதுமட்டுமின்றி பாரத் என்-கேப் 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டையும் பெற்றுள்ளது. கடந்த மாதம் டாடா பன்ச் 18,238 யூனிட்களை விற்பனை செய்துள்ளது.
முதல் 10 கார்களில், ஆறு மாடல்கள் மாருதி சுஸுகி ஆகும். இது உள்நாட்டு ஆட்டோமொபைல் சந்தையில் மாருதி சுஸுகி ஆட்சி செய்து வருவதைக் காட்டுகிறது.
மே 2024 இல் 16,422 யூனிட்களுடன் இரண்டாவது இடத்தில் இருந்த மாருதி ஸ்விஃப்ட், கடந்த மாதம் விற்பனையில் 16 சதவீதம் சரிந்து 16,422 ஆக இருந்தது.
ஹூண்டாய் க்ரெட்டா 16,293 கார்களுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தது (மாதத்திற்கு 12 சதவீதம் வளர்ச்சி).
ஜூன் மாதத்தின் சிறந்த விற்பனையான டாப்-10 கார்கள்
June 2024 Sales Ranking | Car Model | No. of Sales |
1 | Tata Punch | 18,238 |
2 | Maruti Suzuki Swift | 16,422 |
3 | Hyundai Creta | 16,293 |
4 | Maruti Suzuki Ertiga | 15,902 |
5 | Maruti Suzuki Baleno | 14,895 |
6 | Maruti Suzuki Wagon R | 13,790 |
7 | Maruti Suzuki Dzire | 13,421 |
8 | Maruti Suzuki Brezza | 13,172 |
9 | Mahindra Scorpio | 12,307 |
10 | Tata Nexon | 12,066 |
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
tata Punch, Swift, Creta, Ertiga, baleno, Scorpio-n-Nexon, Brezza, Dzire