நாமக்கல்லில் பிறந்த டாடா சன்ஸ் என்.சந்திரசேகரன்.. அவரின் மறக்க முடியாத இரு விடயங்கள்
டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருக்கும் என்.சந்திரசேகரனுக்கு இந்த ஆண்டில் மறக்க முடியாத இரு விடயங்களை பற்றி பார்க்கலாம்.
என்.சந்திரசேகரன்
தமிழக மாவட்டமான நாமக்கல், மோகனூரில் பிறந்து இன்று டாடா குழும நிறுவனங்களின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் என்.சந்திரசேகரன் (Natarajan Chandrasekaran).
இந்த ஆண்டு பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிக லாபத்தை கொடுத்த நிறுவனங்களில் டாடா சன்ஸ் (Tata Sons) நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. அதாவது, இந்திய சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள 27 டாடா குழும பங்குகளின் முதலீட்டாளர்களுக்குச் சுமார் 6 லட்சம் கோடிக்கு லாபம் கிடைத்துள்ளது.
இந்நிலையில், என்.சந்திரசேகரனுக்கு 2023 -ம் ஆண்டில் 2 சம்பவங்கள் தன்னுடைய மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
முதல் விடயம்
உலகின் முதல் நாடாக இந்தியா நிலவின் தென்பகுதியில் விண்கலத்தைத் தரையிறக்கிப் பல சோதனைகளைச் செய்தது. மேலும், உலகமே வியக்கும் வகையில் பல புகைப்படங்களை எடுத்து இஸ்ரோ வெளியிட்டது.
இந்நிலையில், என்.சந்திரசேகரன் தனது YEAR ENDER கடிதத்தில் "இந்தியாவின் வெற்றிகரமான நிலவு பயணத்தை இஸ்ரோ ரூ.600 கோடி முதலீட்டில் செய்து முடித்துள்ளது. சரியான திட்டமிடல் இருந்தால் எதையும் வெல்ல முடியும் என்பதை இந்திய மக்களுக்கும், உலக நாடுகளுக்கும் இஸ்ரோ காட்டியுள்ளது" என்று கூறியுள்ளார்.
இரண்டாவது விடயம்
இரண்டாவது நிகழ்வாக உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியின் செயல்பாடு குறித்து கூறியுள்ளார். இறுதி போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியிருந்தாலும் 1983 மற்றும் 2011 உலகக் கோப்பை வெற்றி தருணங்கள் என் மனதில் உள்ளது.
கபில் தேவ் மற்றும் எம்.எஸ் தோனி தலைமையிலான அணி மீது எனக்கு பெரும் அபிப்ராயம் உள்ளது. ஆனால், ரோஹித் ஷர்மா தலைமையிலான அணி இறுதிப் போட்டி வரையில் சிறப்பான திறனை வெளிப்படுத்தியது. நான் இதுவரை பார்த்ததில்லை என தனது YEAR ENDER கடிதத்தில் அவர் எழுதியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |