டாடா குழுமத்தின் புதிய தலைவர் நோயல் டாடா இந்திய குடிமகன் அல்ல... விரிவான பின்னணி
ரத்தன் டாடாவின் ம்றைவுக்கு பின்னர், டாடா அறக்கட்டளையின் தலைவராக ஒருமனதாக தெரிவாகியுள்ளார் நோயல் டாடா.
ஒன்றுவிட்ட சகோதரர்கள்
டாடா குழுமத்தில் 66 சதவிகித உரிமை அல்லது பங்குகளை இந்த டாடா அறக்கட்டளை கைவசம் வைத்துள்ளது. இதனால் டாடா அறக்கட்டளை தலைவர் பொறுப்பு என்பது மிக முக்கியத்துவம் பெறுகிறது.
நோயல் டாடாவும் ரத்தன் டாடாவும் ஒன்றுவிட்ட சகோதரர்கள். இவர்கள் இருவருமே மறைந்த நேவல் டாடாவின் மகன்கள். நேவல் டாடாவின் முதல் மனைவி சூனி கமிசாரியட்டின் மகன் ரத்தன் டாடா.
ஆனால் நேவல் டாடாவின் இரண்டாவது மனைவியான சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சிமோன் டாடாவின் மகன் நோயல். இருப்பினும், நோயல் டாடா அயர்லாந்தின் குடியுரிமை பெற்றுள்ளார்.
ஆனால் இந்திய குடிமகன் அல்ல என்ற போதும் இந்தியாவில் வசித்து, டாடா குழுமத்தில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். டாடா குழுமத்தில் Trent நிறுவனத்தின் தலைவராக பொறுப்புக்கு வந்ததன் பின்னரே, நோயல் டாடா வர்த்தக உலகில் அறியப்பட தொடங்கினார்.
Nestlé நிறுவனத்தில்
இவரது தலைமையின் கீழ் Trent நிறுவனம் பல கிளைகளை பரப்பியது. சில நகரங்களில் ஒருசில கடைகளை மட்டுமே கொண்டிருந்த Trent, தற்போது இந்தியா முழுக்க 700 கடைகளை கொண்டுள்ளது.
பிரித்தானியாவில் Nestlé நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம் நோயல் டாடாவுக்கு உதவியுள்ளது. 1957ல் மும்பை நகரத்தில் பிறந்த நோயல் டாடா, பாடசாலை கல்வி முடித்து, பிரித்தானியாவில் கல்லூரி படிப்புக்கு என சென்றுள்ளார்.
தொடர்ந்து சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். பிரான்ஸில் வணிகம், வர்த்தகம் தொடர்பான பட்டம் பெற்றார். நோயல் டாடா திருமணம் செய்துகொண்ட ஆலு மிஸ்திரி என்பவரின் சகோதரர் சைரஸ் மிஸ்திரி என்பவரை 2011ல் டாடா குழுமத்தின் தலைவராக நியமித்தனர்.
ஆனால் 2016ல் அவரை டாடா குழுமம் நீக்கியது. அதன் பின்னர் 2017ல் என்.சந்திரசேகரன் தலைவராக பொறுப்பேற்கும் வரையில் ரத்தன் டாடாவே மீண்டும் பொறுப்புக்கு வந்தார்.
நோயல் மற்றும் ஆலு தம்பதிக்கு மூன்று பிள்ளைகள். இதில் லியா டாடா ஸ்பெயின் நாட்டின் பட்டப்படிப்பை முடித்து தற்போது தாஜ் ஹொட்டல்கள் நிறுவனத்தை கவனித்து வருகிறார். மாயா டாடா இன்னொரு நிறுவனத்தில் பணியாற்றி வர, நெவில் டாடா தந்தையுடன் Trent நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |