2022-ல் பிரித்தானிய குடும்பங்களுக்கு விழப்போகும் அடி! நெருக்கடியில் போரிஸ்...
பிரித்தானியால் மில்லியன் கணக்கான குடும்பங்கள் 2022-ல் பொருளாதார ரீதியாக பெரும் நெருக்கடியை சந்திக்கவுள்ளதாக எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
அந்த வகையில் பிரித்தானியாவில் வாழ்வதற்கான செலவு (Cost of Living) கடுமையாக அதிகரிக்கலாம் கூறப்படுகிறது.
பிரித்தானியாவில் அதிகரித்து வரும் எரிசக்தி கட்டணங்கள், வரி உயர்வு மற்றும் பணவீக்கம் அதிகரிப்பு ஆகிய காரணங்களால், ஒரு சராசரி குடும்பம் அடுத்த ஆண்டு (2022) 1,200 பவுண்டுகள் வரை இழப்பை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
பரித்தானியாவில் பணவீக்கம் 6 சதவீதத்தை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், 2022-ஆம் ஆண்டு ஒரு 'அழுத்த ஆண்டு' என்று தீர்மான அறக்கட்டளயின் (Resolution Foundation) அறிக்கை எச்சரிக்கிறது.
2022 ஏப்ரலில் எரிசக்தி விலை வரம்பை மதிப்பாய்வு செய்யும் போது எரிவாயு விலை அதிகரிப்பால் மட்டும் ஓரு குடும்பம் அதன் செலவுகளில் கூடுதலாக 600 பவுண்டுகள் வரை இழக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
அதேபோல், தேசிய காப்பீட்டு பங்களிப்புகளில் 1.25% அதிகரிப்பு சராசரி குடும்பத்திற்கு ஆண்டுக்கு 600 பவுண்டுகள் வரை செலவாகும் என்று கூறுகிறது. இந்த இரண்டும் வரும் ஏப்ரலில் அமுலுக்கு வரும்.
இந்தக் காரணிகளின் தாக்கத்தால், ஒரு சராசரிக் குடும்பம் குறைந்தபட்சம் 1,200 பவுண்டுகள் வரை இழப்பை எதிர்கொள்ளும் என்று Resolution Foundation கூறியது.
ஆனால் இதுவும் குறைவான மதிப்பீடாக இருக்கலாம், ஏனெனில் ஆற்றல் கட்டணங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக உயரக்கூடும் என்று எச்சரித்தது.
ஏனெனில், அதிகரித்து வரும் மொத்த எரிவாயு விலைகள் வீட்டுக் கட்டணங்களில் 1,000 பவுண்டுகள் வரை சேர்க்கலாம் என்று சில நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த நிலையில், அதிகரித்து வரும் எரிசக்தி கட்டணங்கள், வரி உயர்வு மற்றும் பணவீக்கம் ஆகியவற்றில் நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அழுத்தம் அதிகரித்திருப்பதால், அவர் கடும் நெருக்கடியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.