பேச மறுத்த காதலி: இன்டர்வியூக்கு செல்ல டாக்சியில் ஏறும் போது காதலன் செய்த செயலால் விபரீதம்
இந்திய தலைநகர் டெல்லியில், பேச மறுத்த காதலியை 13 முறை கத்தியால் குத்திய காதலனை பொதுமக்கள் பொலிசில் பிடித்துக் கொடுத்தனர்.
பேச மறுத்த பெண்
டெல்லி லாடோ சாராய் பகுதியை சேர்ந்தவர் பிராக்சி. இவர் கவுரவ் பால் என்ற இளைஞருடன் இரண்டு வருடங்களாக பழகி வந்துள்ளார். இந்த விஷயம் பிராக்சியின் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளதால், இளைஞருடன் பழகுவதை நிறுத்த வேண்டும் என்று கண்டித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, கவுரவ் பாலுடன் பேசாமல் பிராக்சி தவிர்த்துள்ளார். இதனால், பிராக்சி மீது கவுரவ் கடும் கோபத்துடன் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
13 முறை குத்திய காதலன்
இந்நிலையில், தனியார் கம்பெனி ஒன்றிற்கு இன்டெர்வியூ செல்வதற்காக பிராக்சி டாக்சியில் ஏறியுள்ளார். அப்போது அவரை வழிமறித்த கவுரவ் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, ஒரு கட்டத்திற்கு மேல் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து 13 இடங்களில் பிராக்சியை சரமாரியாக கவுரவ் குத்தினார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தப்ப முயன்ற கவரவை பிடித்தனர். பின்னர், காயமடைந்த பிராக்சியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
உடனே, சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் கவுரவை கைது செய்தனர். மேலும், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த பிராக்சி அபாயகட்டத்தை தாண்டி விட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |