அபிமான பாடகியின் நிகழ்ச்சியை காண ரூ 8 கோடி திருடிய பெண்... பின்னர் நடந்த சம்பவம்
அமெரிக்காவின் Maryland பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தாம் பணியாற்றும் நிறுவனத்தில் இருந்து 1 மில்லியன் டொலர் திருடிய விவகாரத்தில் குற்றவாளி என நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.
பணியாற்றிய நிறுவனத்தில்
திருடிய பணத்தில் சொகுசாக வாழ்க்கை நடத்தியதுடன், தனது அபிமான பாடகியின் இசை நிகழ்ச்சிக்கான அனுமதிச் சீட்டும் வாங்கியுள்ளார். 41 வயதான Jennifer Tinker என்பவர் 2021 தொடக்கம் 2023 வரையில் தாம் பணியாற்றிய நிறுவனத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக பணம் திருடத் தொடங்கியுள்ளார்.
சுமார் 1 மில்லியன் அமெரிக்க டொலர் அல்லது இந்திய பண மதிப்பில் ரூ 8.3 கோடி தொகையை அவர் சொந்த வங்கிக்கணக்கில் சேர்த்துள்ளார். மட்டுமின்றி, இந்த விவகாரத்தில் சிக்காமல் இருக்க, போலியான தரவுகளையும் அந்த நிறுவனத்தில் சமர்ப்பித்துள்ளார்.
மொத்தம் 90 முறை பணப்பரிமாற்றம் செய்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. மட்டுமின்றி, சட்டவிரோத பரிவர்த்தனைகளை மறைக்க மோசடியான திருத்தங்கள் மற்றும் பதிவுகள் மூலம் டிங்கர் தனது முதலாளியின் நிதிப் பதிவுகளையும் கையாண்டார்.
இசை நிகழ்ச்சியினூடாக
இந்த வழக்கில் விரிவான விசாரணைக்கு அடுத்து தற்போது அவர் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்கொள்கிறார். 2025 ஏப்ரல் 10ம் திகதி இவர் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
5,000 டொலர் வரையில் செலவிட்டு தமது அபிமான பாடகியான Taylor Swift-ன் இசை நிகழ்ச்சிகளை அவர் கண்டுகளித்துள்ளார். 2023 மார்ச் தொடங்கி டிசம்பர் வரையில் Taylor Swift முன்னெடுத்த இசை நிகழ்ச்சியினூடாக சுமார் ரூ 16,600 கோடி அளவுக்கு டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |