சர்வதேச கிரிக்கெட்டில் இதை இனி பார்ப்பது அரிது
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஜிம்பாப்வே வீரர் பிரெண்டன் டெய்லர் ஓய்வு பெற்றதனால், அவருக்கே உரித்தான 'அப்பர் கட்' போன்ற ஷாட்டை இனி சர்வதேச கிரிக்கெட்டில் பார்க்க முடியாது என ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.
சர்வதேச கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஆதிக்கம் செலுத்தாத அணியாக இருந்தாலும், அவ்வப்போது சில மகத்தான வீரர்களை கிரிக்கெட்டுக்கு வழங்கி வந்துள்ளது. அப்படிப்பட்ட வீரர்களுள் பிரெண்டன் டெய்லரும் ஒருவர்.
ஜிம்பாப்வே அணிக்காக 2004ல் அறிமுகமான அவர், 284 சர்வதேச ஆட்டங்களில் விளையாடியுள்ளார். அதிகபட்சமாக 205 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியிருக்கிறார்.
Celebrating @BrendanTaylor86 ?
— ICC (@ICC) September 14, 2021
Watch the Zimbabwe batter’s spectacular signature shot ?️pic.twitter.com/WnXBvtfjsR
அயர்லாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்துடன் தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை முடித்துக்கொண்டார் டெய்லர். 'ஷார்ட் பிட்ச்' பந்துகளை பார்ப்பதற்கு அழகான முறையிலும், கச்சிதமாகவும் 'அப்பர் கட்' மூலம் பவுண்டரிக்கு விரட்டுவதில் டெய்லர் திறமைசாலி.
டெய்லர் ஓய்வு பெற்றதன் மூலம் அவருடைய பிரத்யேகமான 'அப்பர் கட்' போன்ற ஷாட்டை இனி சர்வதேச கிரிக்கெட்டில் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.