80,000 ஊழியர்களை மொத்தமாக வீட்டுக்கு அனுப்பும் டாடாவின் நிறுவனம்! வெளிவரும் பின்னணி
டாடாவின் TCS மென்பொருள் நிறுவனம் 12,000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்க இருப்பதாக ஆகஸ்ட் மாதம் அறிவித்திருந்தது.
பலமடங்கு
ஆனால், உண்மையில் வேலையில் இருந்து நீக்கப்படுபவர்கள் எண்ணிக்கை பலமடங்கு அதிகம் என்றே சமூக ஊடகத்தில் தகவல் கசிந்துள்ளது. சோஹம் சர்க்கார் என்ற சமூக ஊடகப் பயனர் ஒருவர் குறிப்பிடுகையில்,
கிட்டத்தட்ட 80,000 ஊழியர்களை ராஜினாமா செய்யுமாறு TCS நிர்வாகம் கேட்டுக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். வெளிவரும் தகவலில், சில ஊழியர்களுக்கு 18 மாத ஊதியம் உள்ளிட்ட இழப்பீடு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய பலருக்கு அவர்களின் தகுதிக்கு ஏற்ற இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
TCS நிர்வாகம் இதுவரை, இந்த 80,000 பேர்கள் விவகாரத்தில் பதிலளிக்கவில்லை. TCS நிறுவனம் 80,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப இருப்பதாக கசிந்துள்ள தகவல், பல மென்பொருள் நிறுவனங்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |