இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனத்திற்கு 1,750 கோடி அபராதம்! அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு
இந்திய தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்(TCS) அமெரிக்க நிறுவனமான DXC டெக்னாலஜி நிறுவனத்துக்கு சுமார் 210 மில்லியன் டொலர் அபராதமாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
TCS நிறுவனத்திற்கு அபராதம்
இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) முன்னணி DXC டெக்னாலஜி நிறுவனத்துக்கு சுமார் 210 மில்லியன் டொலர் அபராதமாக செலுத்துமாறு அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாண நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த 210 மில்லியன் டொலர் அபராத தொகையானது, இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 1,750 கோடி ரூபாய் ஆகும்.
TCS நிறுவனம் DXC டெக்னாலஜி நிறுவனத்தின் வர்த்தக ரகசியங்களை திருடியதாக தொடரப்பட்ட வழக்கில் டெக்சாஸ் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஆனால் இந்த குற்றச்சாட்டை TCS நிறுவன செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளார்.
DXC ஊழியர் தொடர்பான விபரங்களை சேர்த்து TCS நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் இமெயிலில் அப்படியே காப்பியடித்ததை தொடர்ந்து இந்த மோசடி வெளிவந்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐடி சேவைகள் குறித்து முறையான பயிற்சிகளை வழங்க நிறுவனங்களுக்கு இந்த வழக்கு ஒரு எச்சரிக்கை என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
TataTechnologies, DXC Technology
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |