மிளகாய் பொடி தூவி சந்திரபாபு நாயுடுவின் கட்சி தொண்டர் கொலை.., தொடரும் அரசியல் மோதல்
முகத்தின் மீது மிளகாய் பொடி தூவி தெலுங்கு தேசம் கட்சித் தொண்டரை மர்ம கும்பல் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் அரசியல் மற்றும் சினிமா துறையில் இருபிரிவினருக்கிடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது.
அதுவும் அரசியலில் ரெட்டி அல்லது நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றனர். பிற சமூகத்தை சேர்ந்தவர்கள் வர முடிவதில்லை. இதுவும் பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது.
இந்நிலையில் கர்னூல் மாவட்டத்தில் தெலுங்கு தேசம் தொண்டர் படுகொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு தேசம் தொண்டர் படுகொலை
கர்னூல் மாவட்டம், பத்திகொண்டா தொகுதி தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏவான சியாம்பாபுவின் ஆதரவாளர் ஸ்ரீநிவாசுலு (45). இவர், நடந்து முடிந்த ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் தீவிரமாக உழைத்தார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை பத்திகொண்டா மண்டலம், ஹூசூருஎனும் கிராமத்தில் தனது வீட்டின் அருகே உள்ள வயலுக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பின்தொடர்ந்து மர்ம கும்பல் சென்றுள்ளது.
அவர்கள், ஸ்ரீநிவாசுலுவின் முகத்தில் மிளகாய் பொடி தூவி வெட்டி விட்டு தப்பித்து சென்றனர். பின்னர், அவரின் அலறல் சத்தத்தை கேட்ட அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்த போது ஸ்ரீநிவாசுலு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிஸார் விரைந்து வந்து அங்குள்ள கிராம மக்களிடம் விசாரணை செய்துள்ளனர்.
இதில், ஸ்ரீநிவாசுலு மீது கிராமத்தினர் யாருக்கும் பகை இல்லாததால் அரசியல் கொலை தான் என்று பொலிஸார் முடிவு செய்தனர். இதனால், கொலை செய்தவர்களை பிடிக்க 2 தனிப்படை அமைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |