தேநீர் விற்று 38 வயதில் ரூ 10,000 கோடி சம்பாதித்த நபர்
சீனாவில் Guming Holdings என்ற நிறுவனத்தை நிறுவிய 38 வயதான Yun’an Wang என்பவர் புதிதாக பெரும் கோடீஸ்வரர் பட்டியலில் இணைந்துள்ளார்.
தரமான தயாரிப்பு
Guming நிறுவனமானது Good Me என்ற தேநீர் விற்பனையை முன்னெடுத்து வருகிறது. சீனா முழுவதும் கிட்டத்தட்ட 10,000 கடைகளை இயக்கி வரும் Guming நிறுவனம், சமீபத்தில் ஹொங்ஹொங் பங்குச்சந்தையில் பதிவு செய்ததுடன் 9.1 சதவிகித சந்தைப் பங்கைப் பெற்றுள்ளது.
Guming நிறுவனமானது பங்குச்சந்தை ஊடாக 2025 பிப்ரவரி மாதம் 233 மில்லியன் டொலர் தொகையை திரட்டியுள்ளது. மட்டுமின்றி, Guming நிறுவனம் பங்குச்சந்தையில் நுழைந்ததை அடுத்து அதன் நிறுவனரான யுனான் வாங்கின் சொத்து மதிப்பு 1.2 பில்லியன் அமெரிக்க டொலராக( இந்திய மதிப்பில் ரூ 10,430 கோடி) அதிகரித்துள்ளது.
சீனாவின் சிறு நகரங்கள் மற்றும் டவுன்களை குறிவைத்ததுடன், தரமான தயாரிப்புகளையும் வழங்கி வருவதால் வாங்கால் வளர்ச்சி காண முடிந்துள்ளது. சீனாவின் சிறிய நகரமான Daxi-ல் கடந்த 2010ல் போபா தேநீர் கடை ஒன்றை வாங் திறந்துள்ளார்.
தொடக்கத்தில் பொதுமக்கள் எவரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் மக்களால் வாங்க முடியும் விலையில் தரமான தேநீர் வழங்குவதில் கவனம் செலுத்தியதால், நாளடைவில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
இளையோர்களிடம்
2024 செப்டம்பரில் சீனாவின் 17 மாகாணங்களில் Guming நிறுவனம் விரிவடைந்தது. மட்டுமின்றி, தரமான போபா தேநீர் வழங்கும் சீனாவின் மிகப்பெரிய நிறுவனமாகவும் மாறியது.
போபா தேநீர் என்பது சர்வதேச அளவில் இளையோர்களிடம் பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தி வருகிறது. 1980களில் தொடக்கத்தில் தைவானில் உருவான இந்த போபா டீ, 1990களில் தைவான் புலம்பெயர் மக்களால் அமெரிக்காவில் நுழைந்தது.
தொடக்கத்தில் கலிபோர்னியாவில் பல பகுதிகளில் மிகவும் பிரபலமடைய, பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக பல நாடுகளில் கவனம் பெறத் தொடங்கியது.
தற்போது ஹொங்ஹொங், சீனா, ஜப்பான், வியட்நாம், சிங்கப்பூர், கொரியா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் மக்களால் விரும்பப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |