தேநீர் கொரோனாவைரஸை கொல்லுமாம்... இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே
தேநீர் அருந்துவது, கொரோனாவைரஸைக் கொல்லும் என தற்போது ஆய்வொன்றிலிருந்து தெரியவந்துள்ளது.
கொரோனாவைரஸைக் கொல்லும் தேநீர்
வாய்க்குள்ளிருக்கும் கொரோனாவைரஸ் மீது தேநீரின் தாக்கம் என்ன என்பதை அறிய, ஐந்து வகை தேநீர்களை வைத்து சோதனை செய்துள்ளார்கள் ஆய்வாளர்கள்.
அதாவது, ஆய்வகத்தில் black tea, Green, mint, raspberry மற்றும் eucalyptus tea என ஐந்துவகை தேநீர்களுடன் கொரோனா வைரஸை சேர்த்து, ஐந்து நிமிடங்களில் நிகழும் மாற்றங்களை ஆராய்ந்துள்ளார்கள் அவர்கள்.
அப்போது, black tea 99.9 சதவிகிதமும், Green, mint, raspberry மற்றும் eucalyptus tea, 96 சதவிகிதமும் கொரோனாவைரஸைக் கொல்வது தெரியவந்துள்ளது.
இது மருந்தல்ல
விடயம் என்னவென்றால், தெநீர் அருந்துவதால், வாயிலிருக்கும் கொரோனாவைரஸ் கொல்லப்படும் என்பது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளதேயொழிய, தேநீரைக் கோவிடுக்கு மாற்று மருந்தாக பயன்படுத்தலாம் என்று எண்ணிவிடக்கூடாது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
ஏனென்றால், கொரோனாவைரஸ் மூக்குக்குள்ளும் பெருகுவதுடன், ஒருவருக்கு கோவிட் தொற்று உள்ளது என பரிசோதனையில் கண்டுபிடிக்கப்படும் நிலை வரும்போது, ஏற்கனவே கொரோனாவைரஸ் அவரது நுரையீரலை அடைந்திருக்கும்.
ஆக, தேநீர் கோவிட் தடுப்பூசிக்கோ, அல்லது சிகிச்சைக்கோ மாற்று மருந்து அல்ல. கோவிட் தொற்று உள்ள ஒருவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தேநீர் அருந்துவதால், அவர்கள் வாயில் கொரோனாவைரஸ் இருந்தால் அது கொல்லப்படும் என்பதைக் காட்டுவதற்கு மட்டுமே இந்த ஆய்வு என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |