முதுமையை தவிர்த்து இளமையாக இருக்க தினமும் 3 கப் தேநீர்- ஆய்வில் வெளியான தகவல்
தேநீரானது சுவையாகவும் நறுமணமாகவும் மட்டுமல்லாமல், நாள் முழுவதும் புத்துணர்ச்சியோடு இருக்க உதவுகிறது.
அந்தவகையில், ஒரு நாளைக்கு 3 கப் தேநீர் அருந்துவது முதுமையை தள்ளி வைக்க உதவும் என்று ஆய்வு ஒன்று கூறுகிறது.
ஆய்வின் தகவல்
சீனாவின் செங்டுவில் உள்ள சிச்சுவான் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தேநீர் அருந்தும் பழக்கம் குறித்து ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து தேநீர் அருந்துபவர்கள் மெதுவாக வயதானதற்கான அறிகுறிகளைக் காட்டுகிறார்கள் என்று அவர்கள் கண்டறிந்தனர்.
ஒரு நாளைக்கு மூன்று கப் தேநீர் அல்லது 6 - 8g தேயிலைகளை உட்கொள்வது விரைவில் முதுமை அடையாமல் தடுக்கிறது என்று நியூஸ் வீக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்போதாவது தேநீர் அருந்துவது மற்றும் தொடர்ச்சியாக தேநீர் அருந்துவதும் முதுமையை தள்ளி வைப்பதை வெளிப்படுத்தியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேநீர் அருந்துவதை நிறுத்தியவர்களிடம் முதுமை வேகமாக அதிகரிப்பதைக் காட்டுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
தேயிலை நுகர்வு முதுமையை தாமதப்படுத்தலாம் என்பது நம்பத்தகுந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தேநீர் குடிப்பதால் கிடைக்கும் பயன்கள்
தேநீரில் உள்ள பாலிபினால்கள், குடல் பாக்டீரியாவை மாடுலேட் செய்வதில் பங்காற்றுகிறது.
நோய் எதிர்ப்பு அமைப்பு, வளர்சிதை மாற்றம் மற்றும் அறிவாற்றல் செயல்பாடு ஆகியவற்றை ஒழுங்குபடுத்துவதில் பங்கு வகிக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
தேயிலை நுகர்வு இருதய நோய்கள், நீரிழிவு நோய், டிமென்ஷியா மற்றும் சில வகையான புற்றுநோய்கள் போன்ற வயது தொடர்பான நோய்களிலிருந்து பாதுகாக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
மேலும் தேநீர் நுகர்வு குறைந்த இறப்பு அபாயத்துடன் தொடர்புடையது என்று ஆய்வு ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |