அடிக்கடி டீ குடித்தால் தற்கொலை எண்ணம் தலைதூக்கும்: ஆய்வில் தெரியவந்த பகீர் தகவல்
டீ அடிக்கடி குடிப்பவர்களுக்கு அதிகமான தற்கொலை எண்ணங்கள் ஏற்படுவதாக சீனாவின் ஆய்வு ஒன்று அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
டீ பிரியர்களுக்கு அதிர்ச்சி தகவல்
அடிக்கடி டீ குடிப்பது என்பது இப்போது எல்லாம் சிலர் தங்களின் வாடிக்கையாக வைத்துள்ளனர். சிறிய மனச்சோர்வு அல்லது உடல் சோர்வு ஏற்பட்டால் கூட சிலர் டீ குடிப்பதை வாடிக்கையாக மாற்றிக் கொண்டுள்ளனர்.
இது அவர்களுக்கு ஒருவிதமான புத்துணர்ச்சியை கொடுப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் சீனாவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் டீ அடிக்கடி குடிப்பவர்களுக்கு அதிகமான தற்கொலை எண்ணங்கள் ஏற்படுவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிர்ச்சி அளித்த ஆய்வு முடிவு
சீனாவில் பெரும்பாலானோர் கிரீன் டீ-ஐ அதிகமாக குடித்து வந்த நிலையில், தற்போது பால் கலந்த டீ-ஐ சீன மக்கள் அதிகமாக குடிக்க தொடங்கியது தெரியவந்துள்ளது.
இதையடுத்து சீனாவின் சிங்வா பல்கலைக்கழகத்தில் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வு அதிர்ச்சிகரமான தகவல் தெரியவந்துள்ளது.
அதன்படி, அடிக்கடி டீ குடிப்பவர்கள் அதிகமான மனசோர்வு மற்றும் பதற்றத்திற்கு உள்ளாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.
மேலும் டீ அடிக்கடி குடிப்பவர்கள் மத்தியில் குற்ற உணர்வு அதிகமாக எழுவதுடன், தற்கொலை எண்ணங்களும் அதிகமாக ஏற்படுவதாக ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.
டீ-யில் உள்ள காஃபின் என்னும் வேதிப் பொருள் மனசேர்வையும், தனிமை உணர்வையும் அதிகரிப்பதாக சீன ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
டீ அடிக்கடி குடிப்பவர்கள் உடனடியாக இந்த பழக்கத்தை கைவிடுவதும் மன அழுத்தத்தை அதிகரிக்கும் என என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |