மழைக்காலத்தில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் டீ
மழைக்காலத்தில் நோய்களிடமிருந்து நம் உடலை பாதுகாக்க நோய்யெதிர்ப்பு சக்தி மிகவும் அவசியமான ஒன்று.
இயற்கையாகவே நம் உடலின் நோய்யெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும்.
அந்தவகையில், உடலில் நோய்யெதிர்ப்பு சக்தியை அதிகரிக உதவும் டீ எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- இஞ்சி- 1 துண்டு
- இலவங்கப்பட்டை- சிறிய துண்டு
- கருப்பு மிளகு- 4
- துளசி- 7 இலைகள்
- கிராம்பு- 1
- தேன்- 1 ஸ்பூன்
தயாரிக்கும் முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட வேண்டும்.
பின் அதில் இஞ்சி, இலவங்கப்பட்டை, கருப்பு மிளகு, துளசி மற்றும் கிராம்பு சேர்த்து கொதிக்கவைக்க வேண்டும்.
அடுத்து தண்ணீர் பாதியாகும் வரை கொதிக்க வைத்து பின் வடிகட்டவும்.
இறுதியாக இதனுடன் தேனும் சேர்த்து டீயை அறை வெப்பநிலையில் குடிக்கவும்.
இந்த டீ குடிப்பதால் பல பருவகால நோய்களில் இருந்து உடலை பாதுகாக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |