3 கடைகள்... டீ விற்றே ஆண்டுக்கு பல கோடிகள் வருவாய் ஈட்டும் நபர்
டீ விற்று அன்றாடம் பிழைப்பை நடத்தியவரின் மகன், தற்போது அதே டீ விற்பனையில் களமிறங்கி ஆண்டுக்கு கோடிகள் வருவாய் ஈட்டுகிறார்.
அதே டீ விற்பனை தொழிலை
புனே பகுதியை சேர்ந்த Navnath Yewale என்பவர் தமது தந்தை செய்துவந்த அதே டீ விற்பனை தொழிலை, கோடிகள் வருவாய் ஈட்டும் வணிகமாக மாற்றியுள்ளார்.
நல்ல சம்பளத்தில் பிரபலமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த நவ்நாத் யேவாலே, தற்போது புனே நகரில் பரவலாக அறியப்படும் யேவாலே டீ ஹவுஸ் உரிமையாளராக மாறியுள்ளார்.
புனே நகரில் மட்டும் மூன்று கிளைகளை திறந்துள்ளார். டீ விற்று அன்றாடம் பிழைப்பை நடத்தி வந்துள்ளார் யேவாலேவின் தந்தை. ஆனால் அவரது மறைவு, திடீரென்று ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி என மொத்தமாக ஒரு அசாதாரண சூழலை உருவாக்க, இதில் இருந்து மீண்டுவர தந்தையின் தொழிலையே முன்னெடுத்து நடத்த முடிவு செய்துள்ளார் யேவாலே.
கோடிகளை தாண்டிய வருவாய்
ஓராண்டு காலம் புனே மக்களின் டீ தேவைகள் குறித்து ஆய்வு செய்துள்ளார். அத்துடன் 4 ஆண்டுகள் டீ தொடர்பில் கல்வி பயின்றுள்ளார். பின்னர் தமது சகோதரர்களுடன் இணைந்து 2011ல் யேவாலே டீ ஹவுஸ் என்ற கடையை திறந்துள்ளார்.
வேலையை விட்டுவிட்டு, தம்மிடம் இருந்த மொத்த சேமிப்பையும் முதல் கடைக்காக முதலீடு செய்துள்ளார். மெல்ல மெல்ல யேவாலே டீ ஹவுஸ் மக்களின் ஆதரவை பெற, புனே நகரில் மட்டும் மேலும் இரு கிளைகளை திறந்துள்ளார்.
2018ல் வருவாய் கோடிகளை தாண்டியதாக கூறப்படுகிறது. தற்போது பிற இந்திய நகரங்களில் யேவாலே டீ ஹவுஸ் திறக்கும் முயற்சியில் அவர் இறங்கியுள்ளார் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |