இஸ்லாமிய மாணவரை அடிக்கச்சொன்ன ஆசிரியை! வைரலாகும் வீடியோ!
மாத,பிதா,குரு தெய்வம் என்று கடவுள்களுக்கும் முன்னாடி ஆசிரியர்களை வைத்து வணங்குவதுண்டு.
அப்படி பட்ட ஆசிரியரே மாணவர்களிடத்தில் மதத்தை காரணம் வைத்து ஒரு மாணவனை துன்புறுத்தும் வகையில் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் இஸ்லாமிய மாணவரை அடிக்கச்சொல்லி சக மாணவர்களை மிரட்டும் ஆசிரியையின் வீடியோ சமூகவாலைத்தளங்களில் பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உத்திரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் பகுதியில் இஸ்லாமிய மாணவரை அடிக்கச்சொல்லி, பெண் ஆசிரியை இந்து மாணவர்களை ஊக்கப்படுத்துவது போன்று வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
முசாபர் நகரின் குப்பபூர் கிராமத்தில் உள்ள பள்ளியில் நிகழ்ந்த இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த முசாபர்நகர் காவல்துறையின் பொறுப்பு அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், மாணவர்கள் அனைவரும் தரையில் அமர்ந்திருக்கின்றனர். இஸ்லாமிய மாணவர் ஆசிரியைக்கு அருகில் நின்று கொண்டிருக்கிறார். வேறு ஒரு மாணவர், நின்று கொண்டிருந்த இஸ்லாமிய மாணவரின் கன்னத்தில் அடித்து விட்டுச் செல்கிறார்.
This lady is an absolute disgrace to humanity!
— Revathi (@revathitweets) August 25, 2023
Such nation full of monsters we have become.
No shame.
No fear.
Not an ounce of humanity.
Losing hope. #Pathetic #Inhuman #Muzaffargar #UttarPradesh #DeathOfHumanity pic.twitter.com/uLpaPArcrp
அதன் பின்னர் மேலும் இரண்டு மாணவர்கள் வந்து இஸ்லாமிய மாணவரின் கன்னத்திலும், பின்புறத்தில் அடித்து விட்டுச் செல்கின்றனர்.
ஏன் இவ்வளவு மெதுவாக அடிக்கிறீர்கள்; வேகமாக அடியுங்கள் என்று ஆசிரியை சொல்வது வீடியோவில் கேட்கிறது. அந்த ஆசிரியையின் பெயர் திரிப்தா தியாகி என்பது தெரிய வந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |