அவள் அப்படித்தான்... ஏழு பெண்களை கத்தியால் குத்திய நபருடன் துணிந்து போராடிய ஆசிரியை
வான்கூவரில், கடந்த வார இறுதியில் ஒருவர் ஏழு பெண்களை கத்தியால் குத்தியதில் ஒரு பெண் உயிரிழந்தார், மற்றவர்கள் படுகாயமடைந்தனர்.
கடந்த சனிக்கிழமை Yannick Bandaogo (28) என்பவர் திடீரென வட வான்கூவரிலுள்ள மால் ஒன்றில் நுழைந்து பெண்களை கத்தியால் தாக்கத் தொடங்கினார்.
அப்போது, நடப்பதைக் கண்ட Sheloah Klausen என்னும் ஆசிரியை, தன் மகளை பாதுகாப்பாக மறைந்திருக்குமாறு கூறிவிட்டு, ஓடோடிச் சென்று, அந்த பெண்களைக் காப்பாற்றுவதற்காக Yannickஐத் தன் குடையால் தாக்கத் தொடங்கியுள்ளார்.
சட்டென திரும்பிய Yannick, Klausenஇன் கையை கத்தியால் கீறிவிட்டு, அவரது பின் கழுத்தில் கத்தியால் குத்திவிட்டார்.
படுகாயமடைந்த நிலையில் அமர்ந்திருந்த Klausenஇன் கழுத்தில் ஒரு பெண் கைக்குட்டையை வைத்து அழுத்திப்பிடித்துக் கொண்டுள்ளார்.
Klausenஇன் சகோதரியான Leah Michayluk கூறும்போது, அந்த பெண் மட்டும் அப்போது தன் கைக்குட்டையைக் கொடுத்து உதவாவிட்டால், தன் சகோதரி இந்நேரம் உயிருடன் இருந்திருக்கமாட்டாள் என்கிறார்.
Klausen மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டுவிட்டார் என்றாலும், அந்த தாக்குதலின் தாக்கம் அவரையும் அவரது குடும்பத்தையும் பயங்கரமாக பாதித்துவிட்டதாக தெரிவிக்கிறார் Leah.
தாக்குதல் நடப்பதைப் பார்த்துக்கொண்டிருந்த Klausenஇன் மகள், கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளாள், இரவில் கெட்ட கனவுகளால் அவள் தூங்கமுடியாமல் தவிக்கிறாள்.
தன் சகோதரியான Klausen எப்போதுமே தனக்கு எது சரி என்று நினைக்கிறாளோ அதையே செய்வாள் என்று கூறும் Leah, அவள் அப்படித்தான், மற்றவர்களைக் காப்பாற்ற அவள் எதையும் செய்வாள் என்கிறார்.