பாடசாலை ஆசிரியர்... சிறு முதலீட்டில் தொடங்கிய தொழில்: இன்று நாட்டிலேயே பெரும் கோடீஸ்வரியான பெண்
ரஷ்யாவின் அமேசான் என அறியப்படும் Wildberries என்ற நிறுவனத்தின் உரிமையாளரே, பாடசாலை ஆசிரியராக இருந்து, இன்றும் நாட்டிலேயே பெரும் கோடீஸ்வரராக வளர்ந்தவர்.
அமேசான் போன்ற நிறுவனம்
Tatyana Bakalchuk என்பவர் தொடங்கிய நிறுவனம் தான் Wildberries. ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் பட்டியலில் இவரது சொத்துமதிப்பு ரூ 61,000 கோடி (7.4 பில்லியன் டொலர்) என்றே பதிவு செய்யப்பட்டுள்ளது.
Wildberries நிறுவனத்தில் 60,000 பிராண்டுகளின் தயாரிப்புகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. முன்னர் ஆங்கில மொழி ஆசிரியராக பணியாற்றி வந்த Tatyana Bakalchuk மகப்பேறு விடுமுறையில் இருந்த போது, வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்யும் பொருட்டு அமேசான் போன்ற நிறுவனம் ஒன்றை, ரூ 32,000 முதலீட்டில் தொடங்கியுள்ளார்.
தற்போது அவரது நிறுவனத்தில் 48,000 ஊழியர்கள் இணைந்து செயல்படுகின்றனர். Wildberries நிறுவனத்தின் 99 சதவிகித பங்குகளை தம் வசம் வைத்துக்கொண்டுள்ள அவர், கணவருக்கு 1 சதவிகித பங்குகளை அளித்துள்ளார்.
2023ல் மட்டும் Wildberries நிறுவனம் ரூ 50,000 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. ரஷ்யாவை தவிர்த்து ஜேர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உட்பட அரை டசின் நாடுகளில் Wildberries நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
2004ல் தமது 7வது குழந்தை பிறந்து, மகப்பேறு விடுமுறையில் இருந்த போது Wildberries நிறுவனத்தை Tatyana Bakalchuk தொடங்கியுள்ளார். மேலும், மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவரது கணவரின் சம்பளம் மட்டுமே கொண்டு 6 பிள்ளைகளை வளர்ப்பது கடினம் என்ற நிலையிலேயே Tatyana Bakalchuk தொழில் ஒன்றை தொடங்கும் முடிவுக்கு வந்துள்ளார்.
கோடிகள் சம்பாதித்த போதும்
இதனையடுத்து, தமது கணவர் மற்றும் அவரின் நண்பர் ஒருவரின் உதவியுடன், இணையமூடாக பொருட்களை விற்கும் நிறுவனம் ஒன்றை ரூ 32,000 முதலீட்டில் தொடங்கியுள்ளார்.
தொடக்கத்தில் ஜேர்மன் சில்லறை விற்பனை நிறுவனமான Otto-வுக்கு ஆடைகளை விற்பனை செய்து வந்துள்ளார். மட்டுமின்றி, தனியொருவராக தமது நிறுவனத்திற்கு என உழைத்தார். பொருட்களை வாங்குவதும் விநியோகம் செய்வதும் என அனைத்தையும் அவரே முன்னெடுத்தார்.
கோடிகள் சம்பாதித்த போதும் அவர் வாடகை குடியிருப்பிலேயே வசித்து வந்தார். பெரும் சவால்களை எதிர்கொள்வது அவருக்கு பிடித்தமான ஒன்று. 2008ல் பொருளாதார மந்தநிலை ஏற்பட்ட போது அடிடாஸ் நிறுவனத்தில் சுமார் 9 லட்சம் தொகைக்கான ஆடைகள் மற்றும் காலணிகள் தேங்கியது.
தகவல் அறிந்த Tatyana Bakalchuk அதை மொத்தமாக வாங்கியதுடன், அடுத்த இரண்டு ஆண்டுகளில் அவற்றை விற்பனை செய்துள்ளார். 2020ல் பெருந்தொற்று ஏற்பட்ட போது கூடுதலாக 12,000 புதிய ஊழியர்களை பணிக்கு அமர்த்தி, வாடிக்கையாளர்களுக்கு ஒரே நாளில் விநியோகிக்கும் சவாலான திட்டத்தை முன்னெடுத்து சாதித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |