கேப்டனாக முதல் வெற்றியை ருசித்த தினேஷ் கார்த்திக்!
தினேஷ் கார்த்திக் தலைமையிலான இந்திய அணி பயிற்சியை ஆட்டத்தில் டெர்பிஷிர் அணியை வீழ்த்தியது.
இந்தியா-டெர்பிஷிர் அணிகளுக்கு இடையிலான பயிற்சி டி20 போட்டி நேற்று நடந்தது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தினேஷ் கார்த்திக் பந்துவீச்சை தெரிவு செய்தார்.
அதன்படி முதலில் துடுப்பாட்டம் செய்த டெர்பிஷிர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 150 ஓட்டங்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக வெயின் மேட்சன் 21 பந்துகளில் 28 ஓட்டங்களும், கார்ட்ரைட் 26 பந்துகளில் 27 ஓட்டங்களும் எடுத்தனர்.
இந்திய அணி தரப்பில் அர்தீப் தீப் சிங், உம்ரான் மாலிக் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் சாம்சன் 30 பந்துகளில் 38 ஓட்டங்கள் விளாசினார்.
பின்னர் ஆடிய தீபக் ஹூடா 37 பந்துகளில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகள் விளாசி 59 ஓட்டங்கள் எடுத்தார். சூர்யகுமார் யாதவ் அதிரடியாக 22 பந்துகளில் 36 ஓட்டங்களும், தினேஷ் கார்த்திக் 7 ஓட்டங்களும் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தனர்.
இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற தினேஷ் கார்த்திக்கிற்கு கிடைத்த முதல் வெற்றி இதுவாகும். அடுத்ததாக இந்திய அணி நாளை நார்த்தாம்ப்டன்ஷிர் அணியை எதிர்கொள்கிறது.