இந்திய வீரர்களுக்கு வழங்கப்பட்ட உணவு.. ஐசிசிக்கு பறந்த புகார்
பயிற்சிக்கு பின் வழங்கப்பட்ட உணவு சரியில்லை என இந்திய வீரர்கள் புகார்
சூடாக இல்லாத சாண்ட்விச் மட்டுமே வழங்கப்பட்டதாக ஐசிசியிடம் புகார் கூறியதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது
சிட்னியில் இந்திய அணி வீரர்களுக்கு வழங்கப்பட்ட உணவு சரியில்லை என பிசிசிஐ குற்றம்சாட்டியுள்ளது.
அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பையில் விளையாடி வரும் இந்திய அணி, தனது அடுத்தப் போட்டியில் நெதர்லாந்தை எதிர்கொள்கிறது.
சிட்னியில் இதற்கான பயிற்சியில் இந்திய அணி வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்திய வீரர்களுக்கு வழங்கப்பட்ட உணவு சரியில்ல என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
AFP Photo
தங்களுக்கு சாண்ட்விச் உணவு மட்டுமே கொடுக்கப்படுவதாக கூறிய வீரர்கள், அதுவும் குளிர்ச்சியாகவும், தரமில்லாமல் இருந்ததாகவும் ஐசிசியிடம் தெரிவித்துள்ளனர்.