இலங்கையை வெல்லத் துடிக்கும் இந்தியா! தீவிர பயிற்சியில் வீரர்கள்
இலங்கைக்கு எதிரான டி20 தொடரை முழுமையாக கைப்பற்றும் நோக்கில் இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுட்டுள்ளனர்.
இந்தியா வந்துள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.
இரு அணிகளும் மோதும் முதல் போட்டி நாளை உள்ளூர் நேரப்படி 7 மணியளவில் லக்னோவில் நடக்கிறது.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலி விஷனில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
சமீபத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரையும், 20 ஓவர் தொடரையும் இந்தியா கைப்பற்றியது.
Prep mode ? #TeamIndia hit the ground running as they gear up for the @Paytm #INDvSL T20I series. ? ? pic.twitter.com/pcRxQYiJMw
— BCCI (@BCCI) February 22, 2022
சொந்த மண்ணில் நடந்த இந்த போட்டிகளில் ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும், 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கிலும் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது.
எனவே அதேபோன்ற சிறப்பான ஆட்டத்தை இலங்கைக்கு எதிரான தொடரிலும் வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை 1-4 என்ற கணக்கில் இலங்கை இழந்துள்ள நிலையில், இந்தியாவுக்கு எதிராக தொடரை கைப்பற்ற முயற்சிக்கும், எனினும் சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்துவது கடினமாக இருக்கலாம் என தெரிகிறது.
— BCCI (@BCCI) February 22, 2022
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), பும்ரா (துணை கேப்டன்), இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் அய்யர், சூர்ய குமார் யாதவ், சஞ்சு சாம்சன், வெங்கடேஷ் அய்யர், ரவீந்திர ஜடேஜா, தீபக் ஹூடா, யசுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், அவேஸ்கான், புவனேஸ்வர் குமார், முகமது சிராஜ், ஹர்ஷல் படேல்.
இலங்கை: தசுன் ஷனகா (கேப்டன்), குஷால் மெண்டிஸ், பதும் நிஷன்கா, அஸ்லங்கா, சண்டிமால், குணதிலகா, கமில் மிஸ்ரா, லியானகே, ஹசரங்கா, கருணாரத்னே, சமீரா, லஹிருகுமாரா, பினுரா பெர்ணான்டோ, ஷிரன் பெர்ணான்டோ, மகீஷ் தீக்சனா, வாண்டர்சே, ஜெயவிக்ரமா, அஷின் டேனியல்.