அமீரக அணியை ஊதித்தள்ளிய இந்தியா! 5வது ஓவரிலேயே வெற்றி..படைத்த சாதனை
ஆசியக்கிண்ணப் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியை வீழ்த்தியது.
சுருண்ட அமீரகம்
துபாயில் நேற்று நடந்த ஆசியக்கிண்ணப் போட்டியில் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் மோதின.
முதலில் ஆடிய ஐக்கிய அரபு அமீரகம் 13.1 ஓவரில் 57 ஓட்டங்களுக்கு சுருண்டது. குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும், ஷிவம் துபே 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
பின்னர் களமிறங்கிய இந்திய அணி 4.3 ஓவரில் 60 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
அதிவேக வெற்றி
அபிஷேக் ஷர்மா (Abhishek Sharma) 16 பந்துகளில் 30 ஓட்டங்களும், சுப்மன் கில் (Shubman Gill) 9 பந்துகளில் 20 ஓட்டங்களும் விளாசினர்.
இந்த வெற்றியின் மூலம் சர்வதேச டி20 போட்டியில் தனது அதிவேக வெற்றியைப் பதிவு செய்து இந்திய அணி சாதனை படைத்தது.
அதாவது நேற்றையப் போட்டியில் 93 பந்துகள் மீதமிருக்க 4.3 ஓவர்களில் (27 பந்துகள்) இந்திய அணி வெற்றி பெற்றது.
இதற்கு முன்பு 2021யில் ஸ்கொட்லாந்துக்கு எதிராக 6.3 ஓவர்களில் (39 பந்துகள்) வெற்றி பெற்றிருந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |