இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்ட இந்திய அணி: நியூசிலாந்து எதிராக புதிய வியூகம்
Team india Splits 2 squads for New Zealand ODIs and Test: நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்திய அணி இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்ட இந்திய அணி
ஹாமில்டனில்(Hamilton) நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு பிறகு நடைபெற இருக்கும் 4வது மற்றும் 5வது ஒருநாள் போட்டிகள் மற்றும் அதனை தொடர்ந்து நடைபெற உள்ள நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளுக்காக இந்திய கிரிக்கெட் அணி இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
மவுண்ட் மவுங்கானுயில்(Mount Maunganui) உள்ள பே ஓவல் மைதானத்தில் நவம்பர் 13ம் திகதி மற்றும் 15ம் திகதி நடைபெறும் 4வது மற்றும் 5வது ஒருநாள் போட்டிகளில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் ஒரு இந்திய அணி விளையாட உள்ளது.
Hamilton ✅ Travel day ✅ Hello, Tauranga 👋 #TeamIndia | #NZvIND https://t.co/hi1iDsmZxG
— BCCI (@BCCI) November 11, 2026
ஸ்ரேயாஸ் ஐயர் ஏற்கனவே டி20 அணியின் கேப்டனாக பொறுப்பு வகிக்கும் நிலையில், தற்போது ஒரு நாள் அணிக்கும் முதன்முறையாக தலைமை தாங்க உள்ளார்./// துணை கேப்டனாக இஷான் கிஷன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒருநாள் அணியில் கூடுதலாக திலக் வர்மா, யஷ் தாக்கூர், குமார் குஷாகரா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
திலக் வர்மா 2025ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கடைசியாக ஒரு நாள் போட்டியில் விளையாடியுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளுக்கு தயாராகும் இந்திய அணி
வெலிங்டனில் உள்ள பேசின் ரிசர்வ் மைதானத்தில் நவம்பர் 19ம் திகதி தொடங்கும் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியினர் புறப்பட்ட உள்ளனர்.
முதல் 3 ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சுப்மன் கில், கே.எல் ராகுல், அன்ஷூல் கம்போஜ் மற்றும் நிதிஷ் ரெட்டி ஆகியோர் தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாட வெலிங்டனுக்கு செல்கின்றனர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு அணியை தயார் படுத்தும் விதமாக இந்திய டெஸ்ட் அணிக்கான கேப்டன் பொறுப்பில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை.
4வது மற்றும் 5வது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி
ஸ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), இஷான் கிஷான்(துணை கேப்டன்), விராட் கோலி, ரோகித் சர்மா, அக்சர் படேல், திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட், அர்ஷ்தீப் சிங், நமன் தீர், ஆகிப் நபி, குர்நூர் பிரார், குமார் குஷாகார, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், யஷ் தாக்கூர்