வெறும் 1 ரூபாய்க்கு விற்கப்பட இருந்த நிறுவனம் - தற்போது இந்திய அணியின் ஸ்பான்சர்
இந்திய அணியின் ஸ்பான்சராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள அப்போலோ டயர்ஸ் நிறுவனத்தின் வரலாற்றை இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சர்
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்ஸி ஸ்பான்சராக, டயர் தயாரிப்பு நிறுவனமான அப்போலோ டயர்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
போட்டிக்கு ரூ.4.5 கோடி வீதம், மொத்தம் ரூ.579 கோடிக்கு, 3 ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த காலத்தில், இந்திய அணி 121 இருதரப்பு போட்டிகள் மற்றும் 21 சர்வதேச போட்டிகளில் விளையாட உள்ளது.
ரூ.1 க்கு விற்க முடிவு
இந்திய கிரிக்கெட் அணிக்கே ஸ்பான்சராக மாறும் அளவிற்கு வளர்ந்துள்ள அப்போலோ டயர்ஸ் நிறுவனம் ஒரு காலத்தில், வெறும் 1 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட இருந்ததாக கூறப்படுகிறது.
அப்பல்லோ டயர்ஸின் நிறுவனரான ரௌனக் சிங், தற்போது பாகிஸ்தானில் உள்ள சியால்கோட்டில் பிறந்தவர் ஆவார். இந்தியா பாகிஸ்தான் சுதந்திர பிரிவினையின் போது, அவரது குடும்பம் இந்தியாவிற்கு வந்தது.
இந்தியாவில் குழாய் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வந்த ரௌனக் சிங், 1972 ஆம் ஆண்டில் அப்பல்லோ டயர்ஸ் என்னும் டயர் உற்பத்தி நிறுவனத்தையும் தொடங்கினார்.
ஆனால், தொடங்கிய சிறுது காலத்திலே இந்தியாவில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது. அப்போது மத்திய அரசு வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்களை தேசிய மயமாக்க தொடங்கியது.
இதன் காரணமாக கோகோகோலா, ஐபிஎம் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது செயல்பாடுகளை முடிக்க வேண்டியிருந்தது.
அப்பல்லோ டயர்ஸ் நிறுவனமும் அந்த சிக்கலில் சிக்கியது. அப்பல்லோ டயர்ஸ் நிறுவனத்தின் ஊழியர் சங்கமும், நிறுவனத்தை அரசாங்கத்திடம் ஒப்படைக்க ஒரு இயக்கத்தைத் தொடங்கியது.
ஆனால் தேசியமயமாக்கலை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த ரௌனக் சிங், வழக்கில் வென்று அப்அப்பல்லோ டயர்ஸின் உரிமையாளர் என்ற உரிமையை பெற்றார்.
ஆனால், நீண்டகால தொழிற்சங்க வேலை நிறுத்தம் காரணமாக, நிறுவனம் பாரிய இழப்பை சந்தித்து திவால் ஆகும் நிலைக்கு சென்றது. நிறுவனத்தை வெறும் 1 ரூபாய்க்கு விற்கும் முடிவுக்கு ரௌனக் சிங் வந்திருந்தார்.
அமெரிக்காவில் படித்து முடித்து விட்டு, இந்தியாவில் தொழில்களை கவனித்து வந்த அவரது மகன் ஓங்கர் சிங் கன்வர், அப்போலோ டயர்ஸ் நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்று நிறுவனத்தை சரிவில் இருந்து மீட்டார்.
தற்போது, ரூ.30,000 கோடி நிகர மதிப்புடன் உள்ள அப்போலோ டயர்ஸ் நிறுவனம், கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் 5 மாநிலங்களிலும், ஹங்கேரி மற்றும் நெதெர்லாந்திலும் தனது தொழிற்சாலைகளை வைத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |