T20 உலகக்கிண்ணத்தை வென்றதுடன்..வேறு எந்த அணியும் செய்யாத வரலாற்று சாதனையை படைத்த இந்தியா
இந்திய கிரிக்கெட் அணி ஒரு தோல்வியும் அடையாமல் கிண்ணத்தை வென்ற அணி எனும் சாதனையைப் படைத்துள்ளது.
ஒரு தோல்வியைக் கூட சந்திக்கவில்லை
டி20 உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.
இதன்மூலம் இரண்டாவது முறையாக டி20 உலகக்கிண்ணத்தை வென்றது. இந்த தொடரில் இந்திய அணி ஒரு தோல்வியைக் கூட சந்திக்கவில்லை.
இதுவரை எந்த அணியும் டி20 உலகக்கிண்ணத் தொடரில் தோல்வியை சந்திக்காமல் சாம்பியன் ஆனதில்லை. அந்த வரலாற்றை முதல் முறையாக இந்திய அணி படைத்துள்ளது.
அதிக வெற்றிகள்
அத்துடன் ஒரு சீசனில் அதிக வெற்றிகளை பெற்ற அணிகளின் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவுடன் இணைந்துள்ளது. இரு அணிகளும் தலா 8 வெற்றிகளை இந்த சீசனில் பெற்றுள்ளன. அதே போல் இன்னும் சில சாதனைகளையும் இந்திய அணி படைத்துள்ளது.
டி20 உலகக்கிண்ண வரலாற்றில் இறுதிப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் அதிக ஓட்டங்கள் (176) எடுத்த அணி இந்தியாவாகும்.
இருமுறை டி20 உலகக்கிண்ணத்தை வென்ற மூன்றாவது அணி இந்திய அணியாகும். இதற்கு முன்பு இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் இந்த சாதனையை செய்திருந்தன.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |