லதா மங்கேஷ்கருக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்திய இந்திய வீரர்கள்!
இந்தியாவின் நைட்டிங்கேல் என செல்லமாக அழைக்கப்படும் லதா மங்கேஷ்கர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
இவரது மரணம் ஒட்டு மொத்த இந்தியாவையும் உலுக்கியுள்ளது, ஜனாதிபதி, பிரதமர் உட்பட அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மேற்கிந்திய தீவுகள் அணியுடனான முதல் ஒருநாள் போட்டியை தொடங்குவதற்கு முன்பாக இந்திய வீரர்கள் அனைவரும் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தியுள்ளனர், அனைவரும் கைகளில் கருப்பு பட்டை அணிந்திருந்தனர்.
#TeamIndia members observe a minute silence before start of play to pay their respects to Bharat Ratna Sushri Lata Mangeshkar ji.#RIPLataJi pic.twitter.com/YfP02zyiuA
— BCCI (@BCCI) February 6, 2022
இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது, இதில் இந்திய அணி பந்துவீச்சை தெரிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.