உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட போகும் 11 பேர் இவர்கள் தான்! இந்தியா அதிகாரப்பூர்வ அறிவிப்பு
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடப் போகும் 11 பேர் கொண்ட பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப் போட்டி நாளை இங்கிலாந்தில் இருக்கும் சவுத்தாம்டனில் நடைபெறவுள்ளது. இதில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இரு அணிகள் மோதும் போட்டி இந்திய நேரப்படி காலை 11 மணிக்குதுவங்குகிறது.
இந்நிலையில், இந்த போட்டியில் விளையாடப் போகும் 11 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதில் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள், இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்குகிறது. இப்போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் மொகமது சிராஜ் எதிர்பார்க்கப்பட்டார். ஆனால் அவருக்கு இந்த போட்டியில் வாய்ப்பளிக்கவில்லை.
இந்த 2020-21-ஆம் ஆண்டுகளில் சிராஜ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
🚨 NEWS 🚨
— BCCI (@BCCI) June 17, 2021
Here's #TeamIndia's Playing XI for the #WTC21 Final 💪 👇 pic.twitter.com/DiOBAzf88h