IPL 2021... ஸ்ரீசாந்தை ஏலத்தில் எடுக்க போட்டி போடும் 5 அணிகள் இது தானாம்: கசிந்த தகவல்
சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி, தடை செய்யப்பட்ட ஸ்ரீசாந்த் இந்த ஐபிஎல் தொடரில் விளையாடுவது உறுதி என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணியில் சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராக வலம் வந்த ஸ்ரீசாந்த் ஐபிஎல் தொடரின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி 8 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது.
இதையடுத்து தற்போது தடைகள் முடிவடைந்துள்ள நிலையில், மீண்டும் அவர் முதல் தரப் போட்டிகளில் அவர் விளையாட ஒப்பந்தமாகியுள்ளார்.
தனது தடை காலத்திற்குப் பிறகு முதன்முதலாக சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் கேரள அணியில் ஸ்ரீசாந்த் இடம் பெற்றுள்ளார். இதற்காக ஸ்ரீசாந்த் வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
வலைப்பயிற்சியில் ஸ்ரீசாந்த் தனது பவுலிங் மூலம் மீண்டும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்த சையத் முஷ்டாக் அலி டி20 தொடரின் மூலம் இந்திய அணியில் இடம்பெறும் வாய்ப்பு ஸ்ரீகாந்துக்கு கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீண்ட காலத்திற்கு பிறகு மீண்டும் தனது கிரிக்கெட்டில் கால் பதித்துள்ள ஸ்ரீசாந்தை வரும் ஐபிஎல் ஏலத்தில் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகள் எடுக்க முடிவு செய்திருப்பதாகவும், இறுதியில் எந்தணி எடுக்கப்போகிறது என்பதை பார்ப்போம்.
