பிரான்சில் ஒரு பிரித்தானிய வெடிகுண்டு... வார இறுதியில் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்ட மக்கள்
பிரான்சில், கட்டுமானப்பணியின்போது கண்டெடுக்கப்பட்ட இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டு ஒன்று வார இறுதியில் செயலிழக்கச் செய்யப்பட்டது.
பிரான்சில் ஒரு பிரித்தானிய வெடிகுண்டு...
பிரான்சிலுள்ள Annecy என்னுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 230 கிலோ எடையுள்ள இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டு ஒன்று வார இறுதியில் செயலிழக்கச் செய்யப்பட்டது.
அதற்காக, அந்நகரத்தில் வாழும் சுமார் 4,000 பேர் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டார்கள்.
வெடிகுண்டு நிபுணர்கள் அந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்யும் detonatorஐ பாதுகாப்பாக அகற்றி அதை அழித்துவிட்டு, அந்த வெடிகுண்டை பாதுகாப்பான வேறொரு இடத்துக்குக் கொண்டு சென்றார்கள்.
1944ஆம் ஆண்டு, மே மாதம் 10ஆம் திகதி, இரண்டாம் உலகப்போரின்போது பிரித்தானிய படைகள் அந்த வெடிகுண்டை வீசிய நிலையில், வெடிக்காத அந்த குண்டு தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.