இரவு தூங்கும் முன் ஒரு ஸ்பூன் தேன் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?
இனிப்பு சுவை கொண்ட தேன் உடல் ஆரோக்கியம் விடயத்திலும் முக்கிய பங்காற்றுகிறது. தினமும் இரவு தூங்கும் முன் ஒரு ஸ்பூன் தேன் குடித்து வந்தால் உடலில் பல அற்புதங்கள் நடப்பதை உணரலாம்.
தேன் உடலின் தசைகளை ரிலாக்ஸ் செய்து அமினோ ஆசிடை சுரக்கச் செய்யும். இதனால் தினமும் நல்ல தூக்கம் வரும்.
இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் கரைக்கும். இதனால் இதய பாதிப்புகள் வராது.
ஆண்டி ஆக்ஸிடண்ட், ஆண்டி பாக்டீரியல் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
தேனை முகத்தில் தேய்ப்பதோடு தினமும் இரவு குடித்து வந்தால் சருமத்திற்கு ஈரப்பதம் அளித்து இளமையாக வைத்துக்கொள்ள உதவும்.