குறைந்த விலையில் புதிய 5G iPhone-ஐ வெளியிட Apple திட்டம்!
Apple நிறுவனம் அடுத்த மாதம் குறைந்த விலையில் புதிய 5G iPhone-ஐ வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Apple நிறுவனம் மார்ச் மாதம் 8-ஆம் தேதி வாக்கில், குறைந்த விலை கொண்ட 5G iPhone மொபைல், iPad ஆகியவற்றை வெளியிடத் திட்டமிடுவதாக Bloomberg செய்தி நிறுவனம் தெரிவித்தது.
5G கட்டமைப்புத் திறனுடன், சிறந்த கமெரா, வேகமான ப்ரோசெசர் ஆகியவற்றை அந்த மொபைல் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
இது iPhone SE வரிசையின் புதிய புதுப்பிக்கப்பட்ட மொடலாக இருக்கும் என கூறப்படுகிறது.
வெளியீடு குறித்துத் திட்டமிடப்பட்டிருந்தாலும், உற்பத்தியில் ஏற்படும் தாமதம், மற்ற காரணங்களால் அதன் திட்டங்கள் மாறலாம் என்றும் அறிக்கை குறிப்பிட்டது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.