Spotify கொடுத்த புகார்., சிக்கலில் Apple நிறுவனம்., ரூ.60,000 கோடி அபராதம்
போட்டி விதிகளை மீறியதற்காக ஆப்பிள் நிறுவனத்துக்கு ரூ.60,000 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
போட்டி விதிகளை மீறி, அதன் சொந்த இசை சேவைகளை நியாயமற்ற முறையில் பயன்படுத்திக் கொண்ட வழக்கில் தொழில்நுட்ப நிறுவனமான Apple நிறுவனத்திற்கு ஐரோப்பிய யூனியன் (EU) திங்கள்கிழமை அபராதம் விதித்துள்ளது.
அபராதத் தொகை 1.8 billion euros, அதாவது இலங்கை பணமதிப்பில் சுமார் ரூபா. 60,200 கோடி ஆகும்.
iOS பயனர்களுக்கு தங்கள் பயன்பாட்டிற்கு வெளியே மாற்று, மலிவான இசை சந்தா சேவைகள் பற்றிய தகவல்களை வழங்குவதற்கு App Developer-களை ஆப்பிள் முற்றிலும் தடை செய்துள்ளதால் ஐரோப்பிய ஒன்றியம் கோபமடைந்துள்ளது.
“இது சட்டத்திற்கு எதிரானது. இது மில்லியன் கணக்கான ஐரோப்பிய நுகர்வோரை பாதித்துள்ளது" என்று ஐரோப்பிய ஒன்றிய போட்டி ஆணையர் கூறினார்.
2019 ஆம் ஆண்டில் Spotify தாக்கல் செய்த புகாருக்கு பதிலளிக்கும் விதமாக இந்த தீர்ப்பு வந்தது,
Apple அதன் App Store-க்கு வெளியே மாற்று கட்டண விருப்பங்களைப் பற்றி பயனர்களுக்குத் தெரிவிப்பதில் கட்டுப்பாடுகளை விதித்ததே குற்றசாட்டு.
ஆனால், தீர்ப்பை எதிர்த்து ஆப்பிள் நிறுவனம் நீதிமன்றத்தில் சவால் செய்ய உறுதியளித்தது.
இந்த முடிவு சந்தையின் போட்டித் தன்மையைக் கவனிக்காது மற்றும் நுகர்வோருக்கு தீங்கு விளைவிக்கும் சான்றுகள் இல்லை என்று ஆப்பிள் வாதிடுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Apple-Spotify case, European Union slaps Apple fine, tech giant Apple