Tik Tok இந்தியாவில் மீண்டும் அறிமுகம்! கசிந்துள்ள முக்கிய தகவல்
பிரபலமான குறுகிய வீடியோ செயலியான Tik Tok , 2020-ஆம் ஆண்டில் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட பின்னர், மிக விரைவில் மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிக்டோக்கின் தாய் நிறுவனமான ByteDance, ஜூலை மாத தொடக்கத்தில், TickTock என்ற பெயரில் வர்த்தக முத்திரையை அதற்கான காப்புரிமை மற்றும் வடிவமைப்புகளுடன் பதிவு செய்திருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்தியாவில் ஐடி சட்டம் மற்றும் ஐடி விதிகள் 2008 இன் பிரிவு 69-ன் கீழ் "கிடைக்கக்கூடிய தகவல்களைக் கருத்தில் கொண்டு இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு பாரபட்சமற்ற செயல்களில் ஈடுபட்டதுடன், இந்தியாவின் பாதுகாப்பு, மாநில மற்றும் பொது ஒழுங்கின் பாதுகாப்புக்கு" பங்கம் விளைவித்ததாக, TikTok, பிரபலமான மொபைல் கேம் PUBG உட்பட 59 சீன செயலிகளை இந்திய அரசு தடை செய்திருந்தது.
இருப்பினும், இந்த மாத தொடக்கத்தில் Battlegrounds Mobile India (BGMI) என்ற பெயரில் மொபைல் இந்தியா PUBG கேம் மீண்டும் வந்தது.
இந்நிலையில், TikTok செயலையும் வெற்றிகரமாக மிண்டும்தொடங்கடலாம் என அறியப்படுகிறது.
தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, ஜூலை 6-ஆம் திகதி டிக்டாக் வர்த்தக முத்திரை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் "மல்டிமீடியா பொழுதுபோக்கு உள்ளடக்கத்தை ஹோஸ்டிங் செய்தல், மல்டிமீடியா மற்றும் ஊடாடும் பயன்பாடுகளின் ஹோஸ்டிங்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரை, டிக்டோக் இதனை அதிகாரப்பூரவாக அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேசமயம், டிக்டோக் மீண்டும் வரும் பட்சத்தில், மீண்டும் முன்னிலையை அடையை கூடுதலாக பல வேலைகளை செய்தாகவேண்டும்.
ஏனெனில், டிக்டொக் தடைசெய்யப்பட்ட பிறகு youtube நிறுவனம் Shorts-யம், இன்ஸ்டாகிராம் Reels-யும் அறிமுகப்படுத்தி பிரபலமடைந்துள்ளது.