iPhone பயனர்களுக்காக YouTube அறிமுகப்படுத்தும் சிறப்பான அம்சம்!
யூடியூப் அதன் iOS பயனர்களுக்காக பிக்சர்-இன்-பிக்சர் ஆதரவு அம்சத்தை கொண்டுவரவுள்ளது.
இந்த Picture-in-Picture அம்சம், iOS பயனர்கள் தங்கள் ஐபோன் மற்றும் ஐபேட்களில் பிற விஷயங்களைச் செய்யும்போது யூடியூப் வீடியோக்களைப் பார்க்க அனுமதிக்கும்.
இந்த அம்சம் தற்போது பிரீமியம் சந்தாதாரர்களுக்கும், அமெரிக்காவில் உள்ள அனைத்து iOS பயனர்களுக்கும் (Including free users) அறிமுகப்படுத்தப்படுவதாக, ஒரு YouTube செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஆப்பிள் நிறுவனம் முதலில் IOS 9 உள்ள ஐபேட்களில் இந்த பிக்சர்-இன்-பிக்சர் வீடியோ சப்போர்ட் கொண்டுவந்தது. பிறகு iOS 14 உள்ள ஐபோன்களுக்கும் அந்த அம்சம் கொண்டு வந்தது.
அதன்பிறகு ஒருசில ஐபோன் மற்றும் ஐபேட் பயனர்கள் அவ்வப்போது மட்டுமே இந்த அம்சத்தை அணுக முடிந்தது. அதிலும் YouTube பிரீமியம் சந்தாதாரர்களுக்கே சில சமயங்களில் இந்த அம்சம் செயல்படவில்லை என தொடர்ந்து குற்றச்சட்டுகள் இருந்தன.
இந்த நிலையில், அந்த சிக்கலை குறைந்த பட்சம் அமெரிக்காவில் உள்ளவர்களுக்கு தீர்க்க யூடியூப் முடிவெடுத்துள்ளது என்று தோன்றுகிறது. விரைவில் அனைத்து iOS பயனர்களும், YouTube பிரீமியம் சந்தா இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த அம்சத்தை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலவச பயனர்களுக்கு இந்த அம்சம் எப்போது வரும் என்பதற்கான காலக்கெடுவை YouTube வழங்கவில்லை, ஆனால் பிரீமியம் சந்தாதாரர்களுக்கான வெளியீடு செயல்பாட்டில் உள்ளது என்று உறுதி செய்துள்ளது.