மாமியாரை பந்தாடும் மருமகள்... படம் பிடித்த தாய்: வைரல் வீடியோ
பெண்ணொருவர் தன் மாமியாரை பந்தாடும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்திலுள்ள Ghaziabad என்னுமிடத்தில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கணவன் மனைவியான அகன்ஷா மற்றும் அந்தாரிக்ஷ் இருவருமே மென்பொறியாளர்கள்.
இந்த அகன்ஷா தன் மாமியாரை பந்தாடும் காட்சிகள்தான் இணையத்தில் தற்போது வைரலாகிவருகின்றன.
மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையில் ஏதோ வாக்குவாதம் ஏற்பட, அதை அகன்ஷாவின் தாய் வீடியோ எடுத்துள்ளார். அதை அகன்ஷாவின் மாமியார் தடுக்க முயல, மாமியாரை அறைகிறார் அகன்ஷா.
அடி தாங்காமல் மாமியார் தப்பியோடி இன்னொரு வீட்டிற்குச் சென்று உதவி கேட்க, அங்கிருந்து அவரை இழுத்துவந்து, அவர் கீழே விழுந்த நிலையிலும் அவரை தாக்குவதை தொடர்கிறார் அகன்ஷா.
இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஊடக பயனர்கள் வலியுறுத்த, பொலிசார் அந்த சம்பவம் தொடர்பாக விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.