இலங்கைக்கு ஜேர்மனி முதலான நாடுகள் செய்ய முன்வந்துள்ள தொழில்நுட்ப உதவி...
ஆர்கானிக் விவசாயம் தொடர்பில் இலங்கைக்கு தொழில்நுட்ப உதவி செய்ய ஜேர்மனி முதலான நாடுகள் முன்வந்துள்ளன.
ஆர்கானிக் விவசாயத்துறையில் இலங்கையின் திறன் மற்றும் அதன் உணவுப் பாதுகாப்பின் முக்கியத்துவம் ஆகியவற்றை அங்கீகரித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம், ஜேர்மன் பெடரல் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைச்சகம், ஏற்றுமதி மேம்பாட்டு அமைப்பு ஆகியவை, உள்ளூர் விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு உதவும் வகையில் பயிற்சி வீடியோக்களை உருவாக்கியுள்ளன.
இந்த விடயத்துக்காக, ஐரோப்பிய ஒன்றியம், ஜேர்மன் பெடரல் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் ஆகிய அமைப்புகள் நிதியுதவியும் செய்துள்ளன.
இந்த திட்டத்தின் நோக்கம், இலங்கையின் தேசிய ஆர்கானிக் சந்தையின் பங்களிப்பை, மேம்படுத்தப்பட்ட தரநிலைகள், டிஜிட்டல் மயமாக்கல், முதலீடு மற்றும் அதிகரிக்கப்பட்ட நுகர்வோர் தேவைகள் ஆகியவற்றின் வாயிலாக அதிகரித்தல் ஆகும்.
இந்த ஆர்கானிக் விவசாய வீடியோக்களை European Union Delegation to Sri Lanka and the Maldivesஉடைய யூடியூப் சேனலில் இலவசமாக காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.