நடுத்தர வயது பெண்மணியின் வீட்டிலிருந்து கட்டுகட்டாக பணம் கைப்பற்றப்பட்டதால் பரபரப்பு! யார் அவர்?
தமிழகத்தில் மண்டல பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி செயற்பொறியாளரான ஷோபானா என்பவர் வீட்டில் இருந்து கட்டுகட்டான பணத்தை லஞ்ச ஒழிப்பு துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
லஞ்ச ஒழிப்பு துறைக்கு வந்த ரகசிய தகவலை அடிப்படையாகக் கொண்டு தொரப்பாடி அருகே சென்ற செயற்பொறியாளரின் அரசு வாகனத்தை சோதனையிட்டதில் உரிய ஆவணங்களின்றி வாகனத்தில் ரொக்கமாக இருந்த ரூ.5 லட்சத்தை லஞ்ச ஒழிப்பு துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து, மாவட்ட துணை ஆய்வுக்குழு அலுவலர் முருகன் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து காலையில் ஷோபனாவின் அரசு குடியிருப்பில் சோதனையிட்ட லஞ்ச ஒழிப்பு துறையினரிடம், கணக்கில் வராத 15 லட்சத்து 85 ரூபாய் ரொக்கமும், 4 லட்சம் மதிப்புடைய மூன்று காசோலைகளும், 18 ஆவணங்களும் சிக்கியது.
இதோட்ய் ஒசூரில் அமைந்துள்ள ஷோபனாவின் சொந்த இல்லத்தில் நிகழ்ந்த சோதனையில் ரூபாய் ஒரு கோடியை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஷோபனாவுக்கு சொந்தமான இடங்களில் இருந்து கட்டுகட்டாக பணம் கைப்பற்றப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.