சுவிஸ் விமானத்தில் திடீர் புகை... பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம்
ரொமேனியாவிலிருந்து சுவிட்சர்லாந்துக்குப் புறப்பட்ட விமானம் ஒன்றில் திடீரென புகை எழுந்த விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
சுவிஸ் விமானத்தில் திடீர் புகை...
திங்கட்கிழமை மாலை, ரொமேனியாவின் Bucharest நகரிலிருந்து சுவிட்சர்லாந்தின் சூரிச்சுக்கு சுவிஸ் சர்வதேச விமான நிறுவன விமானம் ஒன்று புறப்பட்டது.
விமானம் நடுவானில் பறந்துகொண்டிருக்கும்போது, திடீரென விமானத்தில் புகை எழுந்துள்ளது.
உடனடியாக, ஆஸ்திரியாவிலுள்ள Graz விமான நிலையத்தில் அவசரமாக விமானத்தை தரையிறக்கியுள்ளார் விமானி.
அந்த விமானத்தில் 74 பயணிகளும் ஐந்து பணியாளர்களும் இருந்துள்ளனர். அவர்களில் 12 பயணிகளுக்கும் நான்கு பணியாளர்களுக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
விமானப்பணியாளர் ஒருவர் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், விமான நிறுவன தொழில்நுட்பக்குழுவினர், விமானத்தில் புகை ஏற்படக் காரணமாக இருந்த தொழில்நுட்பக் கோளாறைக் கண்டுபிடித்துள்ளனர்.
பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக சுவிஸ் அதிகாரிகள் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |