வாட்ஸ்அப்பில் இப்படியொரு அசத்தலான அம்சம் இருப்பது உங்களுக்கு தெரியுமா? ஒருமுறை தான் பார்க்க முடியும்!
View Once அம்சம் பயன்படுத்தப்பட்டால், ஒரு செய்தியின் உள்ளடக்கங்களை ஒருமுறை மட்டுமே அணுக முடியும்.
இந்த அம்சத்தை முதல் முறையாக Snapchat செயலி கொண்டுவந்தது.
இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களுக்கு கிடைக்கிறது.
பெரும்பாலான தளங்களில் செய்திகள் மற்றும் மீடியா கோப்புகள் chat history-யில் இருக்கும் போது, Snapchat புகைப்படங்கள், வீடியோக்கள் அல்லது செய்திகளை பயனர் பெற்றவுடன் மறைந்துவிடும் என்ற அம்சத்தை கொண்டு வந்தது.
இப்போது, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற பிற தளங்களிலும் இதே போன்ற அம்சம் உள்ளது. இன்ஸ்டாகிராமில், இது வானிஷ் மோட் என்றும், வாட்ஸ்அப்பில் View Once என்றும் அழைக்கப்படுகிறது.
இங்கு வாட்ஸ்அப் வியூ ஒன்ஸ் அம்சம் மற்றும் அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்
வாட்ஸ்அப்பில் View Once அம்சம் என்பது என்ன?
முன்பு குறிப்பிட்டது போல, WhatsApp View Once என்பது மறைந்து போகும் செய்திகளின் பதிப்பாகும். அனுப்புநர் இந்த அம்சத்தை பயன்படுத்தி செய்தியை அனுப்பினால், அந்த செய்தியின் உள்ளடக்கங்களை ஒருமுறை மட்டுமே அணுக முடியும்.
உதாரணமாக, A ஒரு வீடியோவை View Once அம்சத்தை பயன்படுத்தி Bக்கு அனுப்பினால், B வீடியோவை ஒரு முறை மட்டுமே பார்க்க முடியும். B வீடியோவைப் பார்த்தவுடன், அது மீண்டும் பார்க்கக் கிடைக்காது. அதேபோல், அனுப்புநராலும் அந்த செய்தியை மீண்டும் பார்க்க முடியாது.
மேலும், அந்த வீடியோ வழக்கமான மீடியா கோப்புகளைப் போல் அல்லாமல் வேறு விதமாக தோன்றும்.
பயனர்கள் View Once அம்சத்தைப் பயன்படுத்தி படங்கள் மற்றும் வீடியோக்களை மட்டுமே அனுப்ப முடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களுக்கு கிடைக்கிறது.
WhatsApp 'View Once' அம்சத்தை எவ்வாறு பயன்படுத்துவது?
- வாட்ஸ்அப்பைத் திறந்து, செய்தியை அனுப்ப வேண்டிய chat-க்கு செல்லவும்.
- கேமரா ஐகானைப் பயன்படுத்தி ஒரு படத்தைக் கிளிக் செய்யவும் அல்லது வீடியோவைப் படமெடுக்கவும் அல்லது கேலரியில் இருந்து ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
- படம்/வீடியோவை அனுப்புவதற்கு முன் தோன்றும் திரையில், வாட்ச் போன்ற ஐகானில் '1' எண்ணுடன் (கீழே வலது மூலையில்) தட்டவும்.
- உடனடியாக பச்சை நிறமாக மாறும், இது படம்/வீடியோ ஒருமுறை மட்டுமே பார்க்க முடியும் என்பதைக் குறிக்கிறது.
- படம்/வீடியோவை அனுப்ப, கீழ் வலது மூலையில் உள்ள பச்சை அம்புக்குறியைத் தட்டவும்.
View Once அம்சத்தைப் பயன்படுத்தும் போது மனதில் கொள்ள வேண்டியவை
ஒரு பயனர் அனுப்பிய புகைப்படம் அல்லது வீடியோ ஒருமுறை மட்டுமே பார்க்கக் கிடைத்தாலும், பெறுநர் அதனை ஸ்கிரீன் ஷாட்களை எடுக்கலாம் அல்லது அதை ஸ்கிரீன் வீடியோவாக பதிவு செய்யலாம். எனவே, நம்பத்தகுந்த நபர்களுடன் மட்டுமே View Once அம்சத்தைப் பயன்படுத்த வாட்ஸ்அப் பரிந்துரைக்கிறது. ஸ்னாப்சாட் போலல்லாமல், அரட்டையில் உள்ள மற்ற நபர் ஸ்கிரீன் ஷாட் எடுத்தால் அனுப்புநருக்குத் தெரிவிக்கப்படாது. மேலும், அனுப்பும் முன் படம்/வீடியோவைச் சரிபார்த்து பின்னர் அதை நீக்க முடியாது.