ஒரே செல்போனில் 2 Whatsapp கணக்கு பயன்படுத்துவது எப்படி? எளிதான வழி இதோ
ஒரே ஸ்மார்ட்போனில் இரண்டு வெவ்வேறு கணக்குகளுடன் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?
இதைச் செய்ய இன்டர்நெட் சேவை மட்டும் இருந்தால் போதும். சியோமி, சாம்சங் , விவோ, ஹவாய், ஹானர், OnePlus மற்றும் Realme போன்ற பயனர்களுக்கு டூயல் ஆப்ஸ் அல்லது பேரலல் ஆப்ஸ் அல்லது டிவின் ஆப்ஸ் போன்ற பயன்பாடுகள் மூலம் சுலபமாக ஒரே நேரத்தில் இரண்டு வாட்ஸ்ஆப் கணக்குகளைப் பயன்படுத்த முடியும்.
MIUI இல் இயங்கும் Xiaomi தொலைபேசி பயனர்கள் Settings > Apps > Dual apps கிளிக் செல்லலாம்.
சாம்சங் தொலைபேசி பயனர்கள் Settings > Advance features > Dual Messenger கிளிக் செல்லலாம்.
விவோ பயனர்கள் Settings > Apps and notifications > App Clone கிளிக் செல்லலாம்.
ஒப்போ தொலைபேசி பயனர்கள் Settings > App Cloner கிளிக் செய்யலாம்.
ஹுவாய் மற்றும் ஹானர் தொலைபேசி பயனர்கள் Settings > Apps > App twin கிளிக் செல்லலாம்.
ஒன்ப்ளஸ் அதன் பயனர்களை Settings > Utilities > Parallel Apps கிளிக் செய்யலாம். இறுதியாக, ரியல்மி பயனர்கள் Settings > App management > App cloner கிளிக் செல்லலாம்.
சரி, ஒரு ஸ்மார்ட்போனில் இரட்டை வாட்ஸ்அப்பை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து காண்போம்
வாட்ஸ்அப்பில் இரண்டாவது கணக்கை இயக்க, செட்டிங்ஸ் செல்லவும்.
இரட்டை பயன்பாடுகள் இயக்க Dual apps, App Clone, App twin, or Parallel Apps என்ற விருப்பத்தைத் தேர்வுசெய்யுங்கள்.
இந்த விருப்பத்திற்காகப் பெயர் நீங்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போனைப் பொறுத்து மாறும் என்பதை நினைவில் கொள்க. டாக்கில் சுவிட்சை கிளிக் செய்து வெயிட் செய்யுங்கள் வாட்ஸ்அப் பயன்பாட்டிற்கு எதிராக கொடுக்கப்பட்டிருக்கும் டாக்கில் சுவிட்சை கிளிக் செய்யவும். நடைபெறும் செயல்முறை முடிவடையும் வரை காத்திருந்து முகப்புத் திரைக்குத் திரும்புங்கள்.
இரண்டாவது பயன்பாட்டின் இரண்டாவது பதிப்பை அடையாளம் காணும் வகையில் வாட்ஸ்அப் ஐகான் மீது புது அடையாளம் காண்பிக்கப்படும்.
இனி ஒரே ஸ்மார்ட்போனில் இரண்டு வாட்ஸ்அப் பயன்படுத்தலாம் அடுத்து நீங்கள் வழக்கம் போல வாட்ஸ்அப்பை ஓபன் செய்து புதிய வாட்ஸ்அப் எண் மூலம் லாகின் செய்துகொள்ளலாம்.
உங்கள் பயன்பாட்டில் உள்ள வாட்ஸ்அப் வழக்கம் போல் செயல்படும். இப்போது கூடுதலாகி மற்றொரு எண் கொண்ட வாட்ஸ்அப் பேரலல் ஆப்ஸ் பிரிவில் செயல்பாட்டில் இருக்கும்.