டீன் ஏஜ் லண்டன் இளம்பெண்ணின் நலன் குறித்து கவலைப்படும் பொலிசார்! புகைப்படங்களை வெளியிட்டு முக்கிய தகவல்
லண்டனில் காணாமல் போயுள்ள டீன் ஏஜ் இளம்பெண் குறித்து பொலிசார் முக்கிய தகவல்களையும், புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர்.
கிழக்கு லண்டனின் ஹேக்னேவை சேர்ந்த ஏஞ்சலினா என்ற டீன் ஏஜ் பெண் மாயமாகியுள்ளார். அவரின் பாதுகாப்பு குறித்த கவலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஏஞ்சலினா காணாமல் போனார் என அவர் குடும்பத்தார் பொலிசில் புகார் அளித்த நிலையில் அவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.
அதே நேரம் அவர் எப்போதில் இருந்து காணாமல் போனார் என்ற தகவலை பொலிசார் இன்னும் வெளியிடாத நிலையில் அவரின் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
ஒரு புகைப்படத்தில் அப்பெண் பள்ளிக்கூட சீருடை அணிந்திருக்கிறார். வீட்டில் இருந்து காணாமல் போன ஏஞ்சலினா தொடர்பில் யாருக்கேனும் தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் கூறியுள்ளனர்.