பிரித்தானியாவில் பள்ளியில் நடந்த கத்திக்குத்து சம்பவம்: 16 வயது சிறுவன் கைது
பிரித்தானியாவில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவில் கத்திக்குத்து
புதன்கிழமை காலை பிரித்தானியாவின் நார்விச் அருகே தார்ப் செயின்ட் ஆண்ட்ரூ(Thorpe St Andrew) பள்ளியில் அரங்கேறிய கத்திக்குத்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த திடீர் வன்முறை சம்பவத்தால் பள்ளி உடனடியாக மூடப்பட்டதுடன், மீட்பு குழுவினர் மற்றும் காவல்துறையினர் அப்பகுதியை சுற்றி பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் சந்தேகத்திற்கு 16 வயது சிறுவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதல் நடத்திய சிறுவன் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் நோக்கத்துடன் தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு வைமண்ட்ஹாம் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.
கத்திக்குத்து தாக்குதலில் காயமடைந்த மாணவிக்கு சம்பவ இடத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டதுடன் கூடுதல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |