பிரித்தானியாவில் பயங்கரவாத சதித்திட்ட விசாரணை: தவறுதலாக கைது செய்யப்பட்ட 14 வயது சிறுவன்
பிரித்தானியாவில் பயங்கரவாத சதித்திட்ட விசாரணையில் தவறுதலாக 14 வயது சிறுவன் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
தவறுதலாக கைது செய்யப்பட்ட 14 வயது சிறுவன்
பிரித்தானியாவில் பயங்கரவாத சதி திட்டம் தொடர்பான விசாரணையின் மத்தியில் 14 வயது சிறுவன் ஒருவன் தவறுதலாக பயங்கரவாத தடுப்பு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சனிக்கிழமையன்று, நாடு முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் சிறப்பு அதிகாரிகள் ஒருங்கிணைந்த கைது நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதில் நான்கு ஈரான் நாட்டவர்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். "குறிப்பிட்ட ஒரு இடத்தை இலக்காகக் கொண்ட சதித்திட்டம்" தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக விசாரணையை வழிநடத்தும் பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
கிரேட்டர் மான்செஸ்டரின் ஸ்டாக் போர்ட் பகுதியில் நடந்த ஒரு கைது நடவடிக்கையின்போது, இரண்டு ஆண்களும் 14 வயது சிறுவன் ஒருவனும் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது. மூவரும் பின்னர் தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
அந்த இளைஞன் தனது அனுபவத்தை மான்செஸ்டர் ஈவினிங் நியூஸிடம் விவரித்தார்.
ஆயுதம் ஏந்திய அதிகாரிகள் அடையாளமில்லாத கார் ஒன்றிலிருந்து திடீரென இறங்கித் தன்னை வழிமறித்ததால் கடத்தப்படலாம் என்ற பயத்தில் தான் ஓடியதாக அவர் தெரிவித்துள்ளார்.
காவல்துறையினர் தனது முகத்தில் துப்பாக்கியை வைத்து "கீழே படு" என்று உத்தரவிட்டதாகவும், பின்னர் தன்னை கீழே இழுத்து கழுத்தில் முழங்காலால் அழுத்தியதாகவும் அவன் குற்றம் சாட்டினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |