அமைதியான கிராமத்தில் நடந்த அசம்பாவிதம்: அதிர்ச்சியில் மக்கள்
பிரான்சிலுள்ள அமைதியான கிராமம் ஒன்றில் பள்ளிக்குச் சென்ற பதின்மவயதுப் பெண்ணொருவர் குத்திக் கொல்லப்பட்ட விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
குத்திக் கொல்லப்பட்ட பதின்மவயதுப் பெண்
நேற்று முன்தினம், பிரான்சிலுள்ள Fère-en-Tardenois என்னும் கிராமத்தில் 14 வயது மாணவி ஒருத்தி பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்திருக்கிறாள்.
அப்போது அவளை 23 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். துரதிர்ஷ்டவசமாக, மருத்துவ உதவிக்குழுவினர் சம்பவ இடத்துக்கு வருவதற்கு முன்பே உயிரிழந்துவிட்டாள்.

புதன்கிழமை மாலையே அந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் அந்தப் பெண்ணின் முன்னாள் காதலராக இருக்கக்கூடும் என பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
அமைதியான அந்த கிராமத்தில் ஒரு மாணவி குத்திக்கொல்லப்பட்ட விடயம் மாணவ மாணவியரிடையேயும் பெற்றோரிடையேயும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |