ஹமாஸ் அமைப்பால் இஸ்ரேல் குழந்தை எரித்துக் கொல்லப்பட்டதை மோசமாக கேலி செய்த இளம்பெண்: பிரான்ஸ் அதிரடி
அக்டோபர் மாதம் 7ஆம் திகதி, ஹமாஸ் ஆயுதக்குழு திடீரென இஸ்ரேல் மீது தாக்குதல் நிகழ்த்தியது. ஏராளமானோர் கொல்லப்பட்ட நிலையில், ஹமாஸ் குழுவினர், குழந்தைகளை தீவைத்து எரித்ததாக திடுக்கிடவைக்கும் தகவல்கள் வெளியாகின.
கொண்டாடிய ஒரு கூட்டம்
திடீரென, ஏராளம் குடும்பங்கள் கொல்லப்பட்ட செய்தி கேட்டு பலரும் அதிர்ச்சியடைந்திருந்த அதே நேரத்தில், சில நாடுகளில், சிலர் இஸ்ரேல் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலை இனிப்பு வழங்கிக் கொண்டாடியதைக் குறித்த செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.
MAHMUD HAMS / AFP
ஒருவரின் இறப்பைக் கூடவா இனிப்பு வழங்கி கொண்டாடுவார்கள் என ஒரு கூட்டம் கோபப்பட, அதையெல்லாம் தூக்கி சாப்பிட்டுவதுபோல, ஒரு பெண், இஸ்ரேல் குழந்தைகள் தீவைத்து எரித்துக் கொல்லப்பட்டதை மோசமான வகையில் விமர்சித்துள்ள சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மோசமான வகையில் விமர்சித்த பெண்
குழந்தை எரிக்கப்பட்ட விடயத்தைக் குறித்து சமூக ஊடகம் ஒன்றில் கேலி செய்துள்ள அந்தப் பெண், அந்தக் குழந்தையின் காலை எரிக்கும்போது, அதில் உப்பும் மிளகுத்தூளும் சேர்த்தார்களா? கொத்தமல்லி சேர்த்தார்களா?
சைட் டிஷ்ஷாக என்ன வைத்திருந்தார்கள், கெச்சப் சேர்த்தார்களா என்றும் கேட்டிருந்தார் அவர்.
This is Pakistani-French social influencer Warda Anwar AKA Haneia Nakei. An Israeli baby was baked to death in an oven by Hamas.
— David Atherton (@DaveAtherton20) November 5, 2023
She inquires as to "What seasoning for this leg of an Israeli baby? "With ketchup sauce? pepper, salt, thyme?”
From @IsraelenFrance. pic.twitter.com/aQLCpdFZHY
பிரான்ஸ் அதிரடி
அந்தப் பெண்ணின் பெயர் Warda Anwar. அவர், பிரான்ஸ், பாகிஸ்தான் இரட்டைக் குடியுரிமை கொண்டவர் ஆவார்.
Wardaவின் கருத்து சமூக ஊடகங்களில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ள நிலையில், பிரான்ஸ் உள்துறை அமைச்சரான Gerald Darmanin, அந்தப் பெண் மீது குற்றவியல் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நேற்று பாரீஸில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பிரான்ஸ் அதிகாரிகள், தீவிரவாதத்தைப் புகழ்ந்ததற்காக அவர் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |