பிரித்தானியாவில் வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டிக்கு ஏற்பட்ட துயரம்! விசாரணையில் அம்பலமான அதிர்ச்சி தகவல்
இங்கிலாந்து நாட்டில் 16 வயது சிறுவன் மூதாட்டியிடம் தவறாக நடந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் New Castle பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் 79 வயது மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு பிறகு இவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அப்போது இதனை நோட்டமிட்ட 16 வயது சிறுவன் ஒருவன் திருட்டு தனமாக வீட்டிற்குள் நுழைந்து மூதாட்டியை பின்னால் இருந்து தாக்கி கழுத்தில் கத்தி வைத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
இதையடுத்து பணம் கிடைக்காததால் கோவத்தில் மூதாட்டியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் அவர் கூச்சலிட்டதால் அவரை கீழே தள்ளிவிட்டு தப்பித்து ஓடிவிட்டார்.
பின்னர் அந்த மூதாட்டி உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் பொலிஸ் நடத்திய தீவிர விசாரணையில் சிறுவனின் பெயர் Reece Wigglesworth என்பது தெரியாதுள்ளது.
இதோடு பல அதிர்ச்சி தகவல்களும் வெளியாகியது. அதாவது அந்த சிறுவன் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணிடம் கத்தி காட்டி வழிபறியில் ஈடுபட்டுள்ளார்.
ஏற்கெனவே ஒரு சிறுமியை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததற்காக கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்த சிறுவன் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்ததையடுத்து அவருக்கு 8 ஆண்டு சிறை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.